Breaking News

முஸ்லிம் லீகின் தொடர் முயற்சியால் கிடைத்த வெற்றி

நிர்வாகி
0
தமிழக அரசின் திருமண கட்டாய பதிவு சட்டத்தில் திருத்தம் முஸ்லிம் லீகின் தொடர் முயற்சியால் கிடைத்த வெற்றி


தமிழக அரசு இயற்றி யுள்ள கட்டாய திருமண பதிவு சட்டத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்பாடத வகையில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான அரசாணை விரை வில் வெளியாகும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

அரசு வட்டாரத்தின் இந்த தகவலானது சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு முதல்வர் கலைஞர் தலைமை யிலான தி.மு.க. அரசின் மற்றொரு ரமளான் பரிசாக அமைந்துள்ளதாக முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சி தெரிவித் துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:

நாடு முழுவதும் நடை பெறும் திருமணங்கள் அனைத்தும் கட்டாய பதிவு செய்யப்பட வேண் டும் என்ற உச்ச நீதிமன்றத் தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு திருமண கட்டாய பதிவு சட்டத்தை கொண்டு வந்தது.

இதற்கான சட்ட முன் வடிவு தமிழ்நாடு சட்ட மன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டு 2009 ஜூலை 29ம் தேதி விவாதத்திற்கு வந்தது. சட்ட முன்வடிவில் தெரி விக்கப்பட்டிருந்த விவரங் கள் முஸ்லிம்களின் தனி யார் சட்டத்திற்கு மாற்ற மாக அமைந்திருந்ததுடன் ஷரீஅத் சட்டத்திற்கும் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்ப தாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கருத்து தெரி வித்தனர்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தொடர் முயற்சிகள்

அதன் அடிப்படையில், இந்த சட்ட முன்வடிவு அறி முகப்படுத்தப்பட்டபோதே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது.

மேலும், இது தொடர் பாக ஆலோசனைக் கூட் டம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஏற்பாட் டில் 2009 ஜூலை 7ம் தேதி தமிழ்சாடு வக்ஃபு வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் தலை மையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில தலை வர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் முன்னி லையில் முஸ்லிம் சமுதா யத்தின் அனைத்து அமைப் புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் வகை யில் நடத்தப்பட்டது.

அந்த கூட்டத்தில் தமி ழக அரசின் இந்த சட்டம் குறித்து மறு பரிசீலனை செய்ய அரசை கேட்டு தீர் மானம் நிறைவேற்றப்பட் டது.

மேலும், தமிழக சட்ட மன்றத்தில் 2009 ஜூலை 21ம் தேதி சட்டமுன்வடிவு குறித்த விவாதத்தில் பங் கேற்று பேசிய அரவாக் குறிச்சி சட்டமன்ற உறுப் பினர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான், வாணியம்பாடி ஹெச். அப்துல் பாசித் ஆகி யோர் வெட்டுத் தீர்மானங் களை முன்மொழிந்தனர்.

தமிழக சடட அமைச்சர் துரை முருகன் இந்த சட் டத்தின் மூலமாக முஸ்லிம் களுக்கு எத்தகைய பாதிப் பும் ஏற்படாது என்று உறு தியளித்ததுடன் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்ய இரண்டு வருட காலம் அவகாசம் அளிக் கப்படும் என்றும் உறுதிய ளித்திருந்தார். இதனடிப் படையில் வெட்டுத் தீர்மா னங்கள் திரும்பப் பெறப் பட்டன.

இந்த சட்டம் தொடர் பாக முஸ்லிம் சமுதாயத் தில் குறிப்பாக மார்க்க அறிஞர்கள் மத்தியில் ஏற் பட்டுள்ள சந்தேகங்களை போக்கும் வகையில் உரிய திருத்தங்களை செய்ய வேண்டும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தீர்மானங்கள் வாயிலாகவும் அரசுக்கு தெரிவித்து வந்தது.

முதல்வர் கலைஞர் அறிவிப்பு

கடந்த 2010 பிப்ரவரி 3ம் தேதி பேரறிஞர் அண்ணா வின் நினைவு தினத்தை யொட்டி செய்தியாளர் களுக்கு முதல்வர் கலைஞர் பேட்டியளித்தார்.

அப்போது, தமிழக அரசின் திருமண பதிவு சட்டம் குறித்து முஸ்லிம் சமுதாயத்திற்கு எழுந் துள்ள சந்தேகங்களை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி யினை மணிச்சுடர் நிருபர் ஹமீது முதல்வர் கலைஞரி டம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் கலைஞர், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையில் தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளதாக வும் இந்த சட்டத்தால் சிறுபான்மை முஸ்லிம் களுக்கு பாதிப்பு இருக் கிறதா என்பது குறித்து சிறுபான்மை சமுதாய அமைப்புகளின் தலைவர் களுடன் கலந்து ஆலோ சனை நடத்த உள்ளேன் என்று அறிவித்தார்.

அதன்படி, சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் சிறுபான்மை சமூக அமைப்புகளின் தலைவர் களை அழைத்து இச்சட் டம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதில், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள்-பிரதிநிதிகள் பலமுறை கூடி இச்சட்டத் தில் செய்யவேண்டிய திருத் தங்கள் குறித்து முன்வரைவு ஒன்றினை தயார் செய்து அரசு துறைக்கு அனுப்பி னர்.

மேலும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.கலீலுர்ரஹ்மான், ஹெச். அப்துல் பாசித் ஆகியோர் சட்டத்துறை அமைச்சருடனும் பதிவுத் துறை அதிகாரிகளுடனும் இச்சட்ட திருத்தம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன்விளைவாக தமி ழக அரசின் திருமண கட் டாய பதிவு சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப் பட்டுள்ளதாகவும், அதற் கான அரசாணை இன்னும் ஓரிருநாளில் வெளியாகும் என்றும் அரசு வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.

மற்றொரு ரமளான் பரிசு

முதல்வர் கலைஞர் தலைமையில் 5வது முறையாக தி.மு.க. அரசு ஆட்சி யமைத்ததும் முஸ்லிம் களின் நீண்ட நாள் கோரிக் கையான இட ஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும் வகையில் 2007ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளில் முதல்வர் கலைஞர் அறிவித்தார். அப்போது அது ரமளான் மாதமாக இருந்ததால் முதல்வர் கலைஞர் முஸ்லிம் சமுதாயத்திற்கு அளித்த ரமளான் பரிசாக அதனை முஸ்லிம்கள் ஏற்று போற்றி மகிழ்ந்தனர்.

தற்போது, சிறு பான்மை முஸ்லிம் சமுதா யத்தின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகை யில் தமிழக அரசின் திருமண கட்டாய பதிவு சட்டத்தில் உரிய திருத் தங்கள் செய்யப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்படக் கூடிய நிலையும் இந்த ரமளான் மாதத்தில் உருவாகியுள்ள தால் முதல்வர் கலைஞரின் மற்றொரு ரமளான் பரிசாக முஸ்லிம்கள் இதனை கருதுகின்றனர்

முஸ்லிம் லீக் தொடர் முயற்சிக்கு வெற்றி

தமிழக அரசின் திருமண கட்டாய சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்திய உடனேயே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது

முஸ்லிம் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை கூட்டத்தை நடத்தி தீர்மானம் நிறை வேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தது.

தமிழக முதல்வர் கலைஞர், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்ட அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை சந்தித்து முறையிட்டது.

தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த தாய்ச்சபை தொய்வின்றி தனது கடமையைச் செய்தது. தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் துணை முதல்வரை கடந்த 23-ம் தேதி சந்தித்து இதுபற்றி வலியுறுத்தினார்.

காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப் பாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., கடந்த இரண்டு மூன்று தினங் களாக தமிழக உள்துறை செயலாளர் ஞானதேசிகன், சட்டத் துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தார்.

இவைகளின் பலனாக தமிழக அரசின் திருமண கட்டாய பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை பிறப் பிக்கப்படுகிறது.

ஆரவாரம் - ஆர்ப்பாட்டமற்ற அமைதி வழியில் காரியம் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

Tags: திருமணப்பதிவுசட்டம்

Share this