Breaking News

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் பத்ரு ஸஹாபாக்கள் நினைவு தினம்!

நிர்வாகி
0
அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் பத்ரு ஸஹாபாக்கள் நினைவு தினம்!


அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் பத்ரு ஸஹாபாக்கள் நினைவு தின சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்ச்சி வியாழக்கிழமை தராவீஹ் தொழுகைக்குப் பின் அபுதாபி நஜ்தா சாலையில் உள்ள ஈ.டி.ஏ ஹாலில் அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் தலமையில் நடைபெற்றது.

பொதுச் செயளாலர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது வரவேற்புரையாற்றினார்.மெளலவி ஹாபிழ் ஹபீபுர் ரஹ்மான் மஹ்லரி துவக்கவுறையாற்றினார்.

பத்ரு போரில் பங்கேற்ற தியாக மிகு ஸஹாபாக்களின் வரலாற்றையும்,பத்ரு போரின் மகத்தான வெற்றியையும் விளக்கி காயல்பட்டிணம் ஹாபிழ் ஹுஸைன் மக்கி மஹ்லரி,கொள்ளுமேடு மெளலவி ஏ.சிராஜுத்தீன் ஃபாஜில் மன்பஈ ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியில் வாணியம்பாடி அரபிக் கல்லூரி முதல்வர் மொளலானா வலியுல்லாஹ் ரஷாதி ஹஜ்ரத்,பனியாஸ் நிறுவன அதிபர் ஹாஜி.ஹமீது மரைக்காயர்,அய்மான் மகளிர் கல்லூரியின் செயளாலர் ஹாஜி சையதுஜாஃபர்,உள்ளிட்ட பல்வேறு ஊர் ஜமாஅத் பிரதிநிதிகள்,மற்றும் உலமாக்கள்,உமராக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாட்டை அய்மான் சங்க பொருளாலர் கீழக்கரை எம்.ஜமாலுத்தீன்,செயளாலர்கள் களமருதூர் ஜெ.எஸ்.ஷர்புத்தீன்,லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,திருவாடுதுறை அன்சாரி பாஷா,மதுக்கூர் ஒய்.எம்.அப்துல்லாஹ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

முடிவில் அய்மான் சங்க செயளாலர் எரவாஞ்சேரி ஹெச்.முஹம்மது இக்பால் நன்றி கூறினார்.இறுதியாக மெளலவி பாஷா ரஷாதி துஆ ஓதினார்.

Tags: அபுதாபி அய்மான்

Share this