Breaking News

சென்னையில் ந‌பிமார்க‌ள் வ‌ர‌லாறு நூல் வெளியீட்டு விழா

நிர்வாகி
0
சென்னையில் ஆயிஷா ப‌திப்ப‌க‌ம் சார்பாக‌ புக‌ழ்பெற்ற‌ வ‌ர‌லாற்றசிரிய‌ர் இப்னு க‌ஸீர் ( ர‌ஹ் ) அவ‌ர்க‌ள் அர‌பியில் எழுதிய‌ அல்பிதாயா வ‌ந்நிஹாயா நூலின் ஒரு ப‌குதியான‌ க‌ஸ‌ஸுல் அன்பியாவின் த‌மிழாக்க‌த்தின் முத‌ல் பாகமான‌‌ ந‌பிமார்க‌ள் வ‌ர‌லாறு 06.08.2010 வெள்ளிக்கிழ‌மை மாலை ஆறு ம‌ணிக்கு தேவ‌ நேய‌ப்பாவ‌ண‌ர் அர‌ங்கில் ந‌டைபெற‌ உள்ள‌து.


ர‌ஹ்ம‌த் ப‌திப்ப‌க‌ மேலாய்வாள‌ர் மௌல‌வி ஏ. முஹ‌ம்ம‌து கான் பாஸில் பாக‌வி த‌லைமை தாங்குகிறார். சென்னை ரோஸ் பேப்ப‌ர் ஸ்டோர்ஸ் பி.எஸ். முஹம்ம‌து பாதுஷா ம‌ற்றும் பி. ஜப‌ருல்லா கான் ஆகியோர் முன்னிலை வ‌கிக்கின்ற‌ன‌ர்.

ஆயிஷா ப‌திப்ப‌க‌ நிறுவ‌ன‌ர் இக்பால் கான் அறிமுக‌வுரை நிக‌ழ்த்துகிறார். சென்னை ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ அர‌பி, பார்ஸி ம‌ற்றும் உர்தூ துறைத்த‌லைவ‌ர் டாக்ட‌ர் பி. நிஸார் அஹ்ம‌த் நூலை வெளியிடுகிறார். முத‌ல் பிர‌தியினை எல்.கே.எஸ். கோல்ட் ஹ‌வுஸ் செர்ம‌ன் எல்.கே.எஸ். சைய‌த் அஹ‌ம‌து பெற்றுக் கொள்கிறார்.

சென்னை புஹாரி ஆலிம் அர‌பிக் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் டாக்ட‌ர் மௌல‌வி பி.எஸ். ம‌ஸ்வூத் ஜ‌மாலி நூல் அறிமுக‌வுரை நிக‌ழ்த்துகிறார்.

த‌மிழ்நாடு வ‌க்ஃப் வாரிய‌ த‌லைவ‌ர் டாக்ட‌ர் க‌விக்கோ அப்துல் ர‌ஹ்மான், த‌மிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற‌க் க‌ழ‌க‌ த‌லைவ‌ர் டாக்ட‌ர் பேராசிரிய‌ர் எம்.எச். ஜ‌வாஹிருல்லாஹ், டாக்ட‌ர் பேராசிரிய‌ர் அப்துல்லாஹ் ( பெரியார்தாச‌ன் ), வேலூர் பாகிய‌த்துஸ் ஸாலிஹாத் அர‌பிக் க‌ல்லூரி பேராசிரிய‌ர் மௌல‌வி ஏ. முஹ‌ம்ம‌து இல்யாஸ் ஃபாஸில் பாக‌வி, மௌல‌வி காஞ்சி அப்துல் ர‌வூஃப் பாக‌வி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழ‌ங்குகின்ற‌ன‌ர்.

ஆயிஷா ப‌திப்ப‌க‌ நிறுவ‌ன‌ர் எம். சாதிக் பாட்சா ந‌ன்றியுரை நிக‌ழ்த்துகிறார். ர‌ஹ்ம‌த் ப‌திப்ப‌க‌ மொழிபெய‌ர்ப்பாள‌ர் சா. யூசுப் சித்திக் மிஸ்பாஹி நிக‌ழ்ச்சியினை தொகுத்து வழ‌ங்குகிறார்.

Share this