Breaking News

தமிழ்நாட்டில் இருந்து மேலும் 362 பேருக்கு ஹஜ் செல்ல அனுமதி

நிர்வாகி
0
இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செல்லவேண்டி அதிகம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதை தொடர்ந்து ஒதுக்கீட்டை அதிகரித்து தரும்படி மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதினார்.

இதை தொடர்ந்து வழக்கமான ஒதுக்கீட்டை அதிகரித்து முதல் கட்டமாக 399 இடங்களும், 2-வது கட்டமாக 74 இடங்களும் ஒதுக்கப்பட்டன. 3-வது கட்டமாக இப்போது 262 இடங்களை கூடுதலாக வழங்கி உள்ளது. மொத்தத்தில் இந்த வருடம் தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் 3 ஆயிரத்து 979 பேர் செல்லலாம்.

இதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும் மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஹஜ்பயணிகளுக்கு சலுகைகள் வழங்குவது குறித்த கூட்டம் மும்பையில் 16-ந் தேதி கூடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி ஹஜ் பயணம்

Share this