Breaking News

வேலூர் எம்.பி. எம். அப்துல் ரஹ்மான் மத்திய அரசுக்கு பாராட்டு

நிர்வாகி
0
மும்பையில் இந்திய வெளியுறவு அமைச்சக ஆலோசனைக்குழுக் கூட்டம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தலைமையில் 03.09.2010 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பொதுவாக டெல்லியில் நடைபெற்று வரும் இக்கூட்டம் இம்முறை பிரத்யேகமாக மும்பை தாஜ்மஹால் ஹோட்டலில் நடத்தப்பட்டதற்கு காரணமாவது, கடந்த 26.11.2008 அன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் பெரும் பாதிப்புக்குள்ளாகி, புனரமைப்பு செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் தனது சேவையினைத் துவங்கியுள்ளது.

இத்தகைய சேவையினை மதிக்கும் பொருட்டும், பாதிக்கப்பட்ட நிர்வாகத்திற்கு அரசின் சார்பில் ஆறுதல் தரக்கூடிய வகையில் இத்தகைய சிறப்புக்கூட்டம் தாஜ்மஹால் ஹோட்டலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவைச் சேர்ந்த 21 எம்.பிக்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்திலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியினைச் சேர்ந்த் டி. ராஜா, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், அதிமுகவைச் சேர்ந்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் எல்லா உறுப்பினர்களும் இந்தியாவின் வெளிநாட்டு தொழில் தொடர்பு என்கிற தலைப்பில் தங்களது கருத்துக்களை எடுத்து வைத்தனர்.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது உரையினை துவங்கும் முன்பாக இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபா ராவ் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு அதன் தொடர்ச்சியாக இலங்கை முகாம்களில் இன்னும் தங்கி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முயற்சி மேற்கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்து தனது உரையினைத் தொடர்ந்தார்.

நிகழ்வின் இறுதியில் உரை நிகழ்த்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா அவர்கள் இந்திய வெளியுறவுத்துறை இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வுக்கு மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டிய வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மானுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் இத்தகைய வழிமுறைகள் அரசின் ஆக்கபூர்வ செயல்பாட்டுக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என்று முத்தாய்ப்பாக குறிப்பிட்டார்.

Share this