Breaking News

இளையான்குடியில் மாணவர்கள்-பெற்றோர்களுக்கு எழுச்சியூட்டிய டைம் டிரஸ்ட் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

நிர்வாகி
0
இளையான்குடியில் மிகச்சிறந்த முறையில் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வரும் இளையான்குடி டைம் டிரஸட் இந்த வருடம் இளையான்குடியை பகுதியைச் சுற்றியுள்ள திறமைவாய்ந்த மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மாணவர்களுக்கு – SEED trust செனனை , சென்னை மற்றும் துபாய் வாழ் .இளையான்குடி நண்பர்களுடன் இனைந்து கல்வி உதவி தொகையை வழங்கியிருக்கிறது.

இளையான்குடி மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-09-2010 அன்று காலை நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி இளையான்குடி கல்லூரி பௌதிகத்துறை பேராசிரியர் உசேன் அவர்கள் கிரா-அத் ஓத இனிதே ஆரம்பமாகியது. இளையான்குடி கல்லூரி வணிகவியல்துறை பேராசிரியர் முனைவர் செய்யது உசேன் வரவேற்புரை நிகழ்த்தினார். டைம் டிரஸ்டின் நிறுவன டிரஸ்டி அல்ஹாஜ் முசாபர் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையுரையரற்றினார்கள்.

நிகழ்சியின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சென்னை சீதக்காதி அறக்கட்டளையின் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஹமீது அப்துல் காதர் , துபாய் சீனதானா அறக்கட்டளையின் தலைவர் அல்ஹாஜ் செய்யது அப்துல் காதர் , மதுரை ஐக்கிய ஜமாத் தலைவர் ராஜா ஹசன், சித்தார்கோட்டை முஹம்மதியா பள்ளிகளின் ஆயுட்கால தலைவர் அல்ஹாஜ் தஸ்தஹீர் ஆகியோர் உதவித் தொகை பெறும் மாணவர்கள் மற்றும் உதவித் தொகை வழங்கிய SEED trust செனனை , சென்னை மற்றும் துபாய் வாழ் இளையான்குடி நண்பர்கள் ஆகியோரை வாழத்திப்பேசினர்.நிகழ்ச்சியில் டைம் டிரஸ்டின் கடந்த கால சேவைகள் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து டைம் டிரஸ்ட் - டிரஸ்டி இளையான்குடி கல்லூரி விலங்கியல்துறை பேராசிரியர் டாக்டர் ஆபிதீன் பேசும்பொழுது வரும் 2011 ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறை நாட்களில் இளையான்குடியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வி விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் இரண்டு நாள் “கல்வித் திருவிழா” ஏற்பாடு செய்து வருவதாகவும் இந்த விழாவில் தமிழக அளவில் தலைசிறந்த கல்வியாளர்கள் அழைக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.

மேலும் வரும் வருடங்களில் டைம் டிரஸ்ட் சார்பாக இளையான்குடியைச் சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்று படிக்க வசதியில்லாத மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி பெற்ற குறைந்தது 5 மாணவர்களை தத்தெடுத்து அவர்கள் மருத்துவம் ,பொறியியல் அல்லது சட்டம் படிக்க விரும்பினால் அவர்களின் கல்வி சார்ந்த அனைத்து உதவிகளையும் மற்றும் பொருளாதார செலவுகளையும் டைம் டிரஸ்ட் முழுமையாக ஏற்றுக்கொண்டு அவர்களை படிக்க வைப்பதற்கான முயற்சியில் இருக்கிறது என்பதாக கூறினார்.


நிகழ்சியின் இறுதியாக ஜனாப் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா அவர்கள் மாணவர்களுக்கு டைம் டிரஸ்ட்டின் சார்பாக 4.5 இலட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்கி சிறப்புறையாற்றினார். அவர்பேசும் பொழுது, ஒவ்வொரு ஜமாத்தினரும் பைத்துல்மால் கண்டிப்பாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் பைத்துல்மால் மூலமாக மட்டுமே நமது சமுதாயத்தில் சிறப்பான வகையில் பொருளாதார மாற்றத்தையும் விழிப்புணர்வையும் உண்டாக்க முடியும் என்றார்.இந்த சிறப்பு நிகழ்சியின் போது விருந்தினர்களாக கலந்து கொண்ட துபாய் சீனதானா அறக்கட்டளையின் தலைவர் அல்ஹாஜ் செய்யது அப்துல் காதர் அவர்களிடம் டைம் டிரஸ்ட் சார்பாக “இளையான்குடி மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகூடத்திற்கு ஓரு கலையரங்கம் கட்டித்தருமாறு வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அதற்கு ஆவண செய்வதாக சீனதானா அறக்கட்டளையின் தலைவர் அல்ஹாஜ் செய்யது அப்துல் காதர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
 
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த டைம் டிரஸ்டின் புரவலர்கள் செல்லக்கண்னு ஹாஜி.சேக்தாவூத், அல்ஹாஜ். சரீப் அவர்களும் ரஷ்யா சென்று ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பித்து திரும்பிய டாக்டர் எஸ்.ஆபிதீன் அவர்களும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்சியின் அனைத்து நிகழ்வுகளையும் இளையான்குடி ஐடிஐ முதல்வர், டைம் டிரஸ்ட்டின் டிரஸ்டி அல்ஹாஜ் அப்துல் கறீம் மிக நேர்த்தியான முறையில் தொகுத்தளித்தார்.
 
இறுதியாக இளையான்குடி மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஜான் முஹம்மது நன்றி கூறினார்.நிகழ்சி ஆரம்பம் ஆகும் காலை நேரத்தில் சாரலுடன்கூடிய மழை பெய்தாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாது மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் என்று சுமார் 800 க்கும் மேற்பட்டேரர் குவியத்தொடங்கினர். நிகழ்சியின் இறுதிவரை கலந்து கொண்ட பெரும்பாலான மாணவர்களும், பெற்றேரர்களும் கல்விக்கு முக்கியத்துவம் தரும் இது போன்ற நிகழ்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டனர். அதே போல் வெளிநாடுகளில் வாழும் இளையான்குடி நண்பர்கள் எங்களுக்கு தந்த பொருளாதார உதவிகளுக்கு தங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கும் ஏக இறைவனிடம் துஆ கேட்கிறோம் என்று பெருமிதத்துடன்

Share this