Breaking News

காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

நிர்வாகி
0
காட்டுமன்னார் கோவில் தாலுகா அலு வலகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.


தாலுகா அலுவலகம்

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவிலில் தாலுகா அலுவலகம் உள்ளது.இந்த அலுவலகத்தை உள்ளடக்கி சுமார் 180-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.இந்த அலுவலகத்தில் சமூக நலத்துறை, குடிமை பொருள் போன்ற பல்வேறு பிரிவுகள் உள்ளது.

இதனால் நாள்தோறும் பொதுமக்கள் பட்டா மாற்றம், வீட்டுமனைப்பட்டா , நில அளவை, ரேஷன் கார்டு, இருப்பிட சான்று, சாதிச் சான்று, வருமான சான்று போன்ற பல்வேறு சான்றிதழ் வாங்கு வதற்காக வந்து செல் கின்றனர்.நாள் ஒன்றுக்கு 500-க் கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.

பணிச்சுமை அதிகம்

ஆனால் தாலுகா அலுவலகத்தில் பணியாற்ற ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ளது.ஊழியர்கள் பணி ஓய்வு, நீண்ட நாள் விடுப்பு போன்ற காரணங்களால் இன்னும் பணிக்கு வராமல் உள்ளதால் பணிச்சுமை அதிகமாகிறது.இந்த பணி களையும் தற்போது பணி யாற்றும் ஊழியர்களே கூடுதல் சிரத்தை எடுத்து பணி யாற்றி வருகின்றனர்.

இருப்பினும் இந்த துறையில் காலி பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது.இதை நிரப்பக்கோரி வருவாய் அலுவலர் சங்கங்களும் அவ்வப்போது போராட் டங்களை நடத்தி வருகிறது.

ஆனால் இது வரை காலி பணியிடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடமும் சில இடங்களில் காலியாக உள்ளது.

நிரப்ப வேண்டும்

இதை அருகில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி கூடுதலாக பணியாற்ற வேண்டும்.இதனால் அவர்கள் வேலை பார்க்க முடியாத நிலை ஏற் படுகிறது.இதற்கிடையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அலுவலக கூட்டம் போன்ற பல்வேறு பணிகளுக்காக கிராம நிர்வாக அதிகாரிகள் சென்று விடுகின்றனர்.

இதனால் அத்தியாவசியத் திற்காக ஏதாவது சான்றிதழ் பெற வேண்டும் என்றால் கிராம நிர்வாக அதிகாரியை தேடி பிடிக்க வேண்டியதாகி விடுகிறது.இதன் காரணமாக பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அலைக் கழிக்கப்படுகிறார் கள்.

ஆகவே தாலுகா அலு வலகத்தில் உள்ள காலி பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Share this