குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 'கல்வி விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்வு'
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
0
குவைத்தில் செயற்படும் இந்திய கல்விக்கூடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களின் புது கல்வியாண்டின் தொடக்கமாகவும், குவைத் மண்ணில் வாழும் நம் சகோதரர்களின் கல்வித் தாகத்தை தீர்ப்பதற்காகவும், இந்திய இஸ்லாமியர்களின் கல்வி நிலை குறித்த உண்மைத் தகவல்கள், எதிர்கால உள்நாடு மற்றும் வெளிநாடு கல்வி பற்றிய ஓர் அலசல், என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? எப்போது படிக்கலாம்? ஆகியவற்றின் விரிவான விளக்கங்கள், கல்வி உதவித் தொகை குறித்த ம(i)றக்கப்பட்ட உண்மைகள் போன்றவற்றை குறித்து மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கும், அனைவரும் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும், சந்தேகங்களில் தெளிவு பெறுவதற்கும் 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்யும் 'கல்வி விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்வு' கீழ்க்கண்ட முறையில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் 16.09.2010 வியாழக்கிழமை மாலை 7:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் ஃபஹாஹீல், கத்ஆ 7, பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா) பள்ளி' பள்ளிவாசலில் நடைபெறும்.
சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவி காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு முகாமில் சங்கத்தின் கல்விக்குழு செயலாளரும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் ஜலீப் இண்டிகிரேடட் இந்தியன் பள்ளியின் இணைப் பேராசிரியரும், சிறந்த கல்வியியல் ஆய்வாளருமான முனைவர் பேராசிரியர் எம். அப்துல் ஹமீத் M.Sc., M.Phil, B.Ed., PhD., அவர்களும், சங்கத்தின் பயிற்சி மற்றும் வழிகாட்டல் குழு செயலாளர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைஃக் எம்.மஹ்பூப் பாஷா ரஷாதீ ஆகியோர் சிறப்புரையாற்றுவதுடன் கல்வி குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க இருக்கின்றனர்.
இன்ஷா அல்லாஹ் 17.09.2010 வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (உர்தூ குத்பா பள்ளி - KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில்)' பள்ளிவாசலில் நடைபெறும்.
சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு முகாமில் சங்கத்தின் கல்விக்குழு செயலாளரும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் ஜலீப் இண்டிகிரேடட் இந்தியன் பள்ளியின் இணைப் பேராசிரியரும், சிறந்த கல்வியியல் ஆய்வாளருமான முனைவர் பேராசிரியர் எம். அப்துல் ஹமீத் M.Sc., M.Phil, B.Ed., PhD., அவர்களும், சங்கத்தின் கல்விக் குழு உறுப்பினரும், குவைத் யுனிவர்ஸல் அமெரிக்கன் கலாசாலையின் கல்வியியல் ஆலோசகரும், குவைத் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான ஓட்டி (பைலட்) பயிற்சியாளரும், சிறந்த மனோதத்துவ அறிஞருமான பேராசிரியர் எம். அப்துர் ரஹீம் M.A., M.Ed., QTIC, ஆகியோர் சிறப்புரையாற்றுவதுடன் கல்வி குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க இருக்கின்றனர்.
சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., தொகுத்து வழங்க இருக்கும் இச்சிறப்புமிகு முகாம்களில் இஸ்லாமிய பொது அறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும் வழங்கப்படும். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளிலும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் திருக்குர்ஆன் விவகாரங்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்திருக்கும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பின் விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் செய்யப்படும். துஆவுடன் இன்ஷா அல்லாஹ் இனிதே நிகழ்ச்சிகள் நிறைவுபெறும்.
இச்சிறப்புமிகு நிகழ்வுகளில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு...
துரித சேவை அலைபேசி எண் : (+965) 97 87 24 82
அதிகாரப்பூர்வ இணையதளம் : www.k-tic.com
மின்னஞ்சல் முகவரிகள் : q8tic@yahoo.com/ ktic.kuwait@gmail.com
யாஹு குழமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group
நன்றி. வஸ்ஸலாம். செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்
இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Tags: கருத்து கல்வி குவைத் நிகழ்வு பரிமாற்றம் முகாம் விழிப்புணர்வு k-tic