Breaking News

கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

பக்கர்Brothers.kollumedu
0

கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் இரு நாள்களாக அவ்வப்போது குறிப்பாக இரவில் மழை பெய்து வருகிறது பகல் நேரத்தில் தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை இடி மின்னலுடன் பெய்த மழையில், கம்மியம்பேட்டையில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் 5 தென்னை மரங்கள் இடி தாக்கி கருகின.

நகரில் சில வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் சேதம் அடைந்தன. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் 90 சதவீத மீனவர்கள் கடந்த 2 நாள்களாக மீன் பிடிக்கச் செல்லவில்லை என்று, மீனவர் பேரவை மாவட்டச் செயலர் சுப்புராயன் தெரிவித்தார். கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மீன் வரத்து குறைந்ததால் அங்காடிகளில் மீன்கள் விலை அபரிமிதமாக உயர்ந்தது.
visit:கொள்ளுமேடுxpress

Share this