Breaking News

வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந் துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நிர்வாகி
0
காட்டுமன்னார் கோவில் பகுதியில் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந் துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


வெற்றிலை சாகுபடி

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் பகுதியில் உள்ள லால்பேட்டை, மானி யம் ஆடூர் , நத்த மலை, கொள்ளுமேடு, திருச்சின்ன புரம், கந்தக்குமரன் உள்பட பல்வேறு பகுதியில் சுமார் 500 ஏக்கர் வெற்றிலை விவசாயிகள் காலம், காலமாக சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த வெற்றிலை ஊடு பயிராக முருங்கை, வாழை ஆகியவற்றை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.வெற்றிலை அனைத்து முக்கிய நிகழ்ச்சி களிலும் இடம் பெறுகிறது.இதனை மருந்து பொருளாகவும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் உள்ளூர் மற்றும்வெளி ஊர்களில் இருந்து வெற்றிலை கொடி மற்றும் அவத்தி விதை களை வாங்கி வந்து விவசாயிகள் பயிர்செய்து வருகின்றனர்.

குறைந்த கூலி

ஒரு ஏக்கர் வெற்றிலை சாகு படி செய்ய சுமார் ரூ.3 லட்சம் வரை செலவாகிறது.முதல் ஆண்டில் லாபம் கிடைப்பது அரிது.அடுத்த ஆண்டில் தான் லாபம் கிடைக்கும்.இருப்பினும் இந்த வெற்றிலை சாகுபடி செய்ய எந்த வங்கியும் கடன் வழங்க முன்வருவதில்லை.இதனால் விவசாயிகள் தங்கள் சொந்த செலவிலேயே வெற்றிலை பயிர் செய்து வரு கின்றனர்.

வெற்றிலையை பறிப்பதற்கு ஆட்களும் சரி வர வருவ தில்லை.ஏனெனில் மற்ற வேலையை காட்டிலும் இங்கு குறைவான கூலி வழங்கப் படுகிறது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பயிர் செய்த வெற்றிலை கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி ,சென்னை வரைஏற்றுமதி செய்யப் பட்டது.தற்போது வெற்றிலை பயிர் செய்யும் விவசாயிகள் அடிக்கடி விலை வீழ்ச்சியால் நாளுக்கு நாள் வெற்றிலை பயிர் செய்யும் விவசாயிகள் குறைந்து வரு கின்றனர்.

விலை வீழ்ச்சி

கடந்த 15 நாட்களாக வெற் றிலை பறிப்பதற்கு அதிக கூலி கொடுக்கப்பட்டு வருகிறது.ஆனால் வெளி சந்தையில் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.ஒரு கட்டு வெற்றிலை ரூ.60 முதல் ரூ.80 வரைக்கு தான் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த ஆண்டு ஒரு கட்டு ரூ.250 வரையிலும், விஷேச தினங் களில்ரூ.500 வரைக்கும் விற் பனை செய்யப்பட்டுள்ளது.தற்போது குறைந்த விலைக்கு வெற்றிலைவிற்பனை செய்யப் படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

இது பற்றி லால்பேட்டையை சேர்ந்த விவசாயி ஜாபர் அலி கூறுகையில்,கடந்த 10 ஆண்டுகளாக வெற்றிலை சாகுபடி செய்து வருகிறேன்.வெளி ஊர்களில் இருந்து கொடி வாங்கி வந்து நட்டு பயிர் செய்து வருகிறேன்.வீராணம் ஏரி மூலம் தண்ணீர் பாய்ச்சி செய்து வருகிறேன்.இந்த வெற்றிலை பயிரில் ஒரு ஆண்டில் வாடல் நோய், சுருட்டு நோய் தாக்கும்.ஆனால் இதை கட்டுப்படுத்த முடியாது.

வங்கிக்கடன்

இதனால் இதனை முழுமை யாக அழித்து விட்டு புதிதாக கொடிகால் நட்டு பயிர் செய்வோம்.ஆனால் தற்போது விலை வீழ்ச்சியால் லாபம் கிடைப்பதில்லை. கூலியும் கொடுக்க முடிவதில்லை. முன்பு 500 ஏக்கர் வெற்றிலை பயிர் செய்து வந்தோம்.ஆனால் அதில் லாபம் இல்லாததால் இப்போது இந்த பகுதியில் 300 ஏக்கர் தான் பயிர் செய்து உள்ளோம்.

இது அடுத்து ஆண்டு மேலும் குறைய வாய்ப்பு உள்ளது..ஆகவே எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் நெல்லுக்கு கொள்முதல் நிலையம் வைத்து விற்பனை செய்வது போல், வெற்றிலைக்கும் ஒரு கொள்முதல் நிலையத்தை அரசு கொண்டு வந்து எங்க ளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என் றார்.

Share this