காஷ்மீரில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அனைவரும் பல ஆண்டுகளாக தினந்தோறும் கூறுவதையே நானும் கூறினேன்' என பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்தார்.
பக்கர்Brothers.kollumedu
0
பிரபல எழுத்தாளரும், புக்கர் பரிசு பெற்றவருமான அருந்ததி ராய், சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். டெல்லி மற்றும் ஸ்ரீநகரில் சமீபத்தில் நடந்த கருத்தரங்குகளில் பேசிய அவர், `காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல என்றும், இந்தியாவின் ஒரு பகுதியாக அது ஒருபோதும் இருந்ததில்லை' என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, அவர் மீது, `ராஜதுரோக' வழக்கு பதிவு செய்வது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இது தொடர்பாக சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை செய்யுமாறு டெல்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது கிலானி மீதும் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது காஷ்மீரில் தங்கியுள்ள அருந்ததி ராய் நேற்று ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், அவர் கூறியிருப்பதாவது:-
தேசத்துக்காக வருந்துகிறேன்:
காஷ்மீர் சுதந்திரம் பற்றி நான் பேசிய கருத்துகளுக்காக, என் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படலாம் என செய்தித்தாள்கள் மூலமாக அறிந்தேன். காஷ்மீரில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பல ஆண்டுகளாக தினந்தோறும் என்ன கூறுகிறார்களோ, அதைத்தான் நான் கூறினேன். வரலாற்று ஆசிரியர்களும் பல ஆண்டுகளாக எதை எழுதுகிறார்களோ, அதைத் தான் நானும் பேசினேன்.
எழுத்தாளர்களின் சிந்தையில் தோன்றுவதை, பேசுவதை தடுத்து அமைதியாக்கும் இந்த தேசத்தை நினைத்து வருந்துகிறேன். சமூக கொலைகாரர்கள், பெரிய அளவில் கொலைகளை நிகழ்த்தியவர்கள், பெரிய நிறுவனங்களை நடத்தும் ஊழல்வாதிகள், கொள்ளையர்கள், காமுகர்கள் என அனைவரும் சுதந்திரமாக உலவுகின்றனர். ஆனால், நீதி கேட்டு பேசுபவர்களை சிறையில் தள்ள நினைக்கும் இந்த தேசத்தை நினைத்து இரக்கப்படுகிறேன்.
இவ்வாறு அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.
visit:கொள்ளுமேடுxpress