Breaking News

லால்பேட்டையில் சிறுபான்மையினர் உரிமைகள் தினம் சிறப்புக் கூட்டம் மற்றும் பேரணி

நிர்வாகி
0
லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் சிறுபான்மையினர் உரிமைகள் தினம் சிறப்புக் கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் செயலாளர் ஹாஜி ஐ.முஹம்மது கமாலுத்தீன் தலமை வகித்தார்.









மெளலவி ஏ.ஆர்.முஹம்மது தய்யூப் கிராஅத் ஓதினார்.
இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.
முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கத்தலைவர் ஹாஜி எஸ்.ஜாஃபர் அலி,மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க நிர்வாக குழு உறுப்பினர் எம்.ஏ.ஃபத்தஹுதீன்,காட்டுமன்னார்குடி வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஹாஜி எஸ்.முஹம்மது இப்ராஹிம்,இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் பள்ளியின் தாலாளர் எஸ்.ஹாரிஸ் அஹமத்,பேரூராட்சி மன்றதலைவர் ஏ.ஆர்.சபியுல்லாஹ்,ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி செயலாளர் ஏ.எம்.ஜாஃபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ஆ.கணபதி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு அரசின் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் திரு.சந்திரசேகர்,உலமாக்கள் நல வாரிய உறுப்பினர் மெளலவி எம்.ஒய்.முஹம்மது இஸ்மாயில் நாஜி,அருட்தந்தை ஐ.ஏ.எஃப்.செல்வராஜ்,அருட்தந்தை ஐ.பீட்டர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.



முன்னதாக பள்ளி மாணவர்கள்,ஊர் பிரமுகர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
இறுதியில் முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்க பொருலாளர் எம்.ஏ.ஜெகரிய்யா நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்க நிர்வாகிகள் முஹம்மது யஹ்யா, கவிஞர் நஜீர் அஹ்மது,முஹம்மது அஹ்ஸன்,முஹம்மது தாஹிர் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.

thanks.lalpet.com

Tags: லால்பேட்டை

Share this