Breaking News

லால்பேட்டை சைகுல் மில்லத் மற்றும் சீரத் கமிட்டி நடத்திய மாபெரும் குர் ஆன் மனனம் மற்றும் ஹதீஸ் போட்டி

நிர்வாகி
0






அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் திருநாமத்தால்…,



லால்பேட்டை 19/02/2011: மார்க்க கல்வி அவசியம்தான ? என்று கேள்வி கேட்கும் இந்த காலகட்டத்தில் அது மிக மிக அவசியம் என்று உணர்த்தி அதற்க்கான ஒரு முயற்சியும் எடுத்து நடத்தி வெற்றி கண்டுள்ளனர் நமதூர் சைகுல் மில்லத் மற்றும் சீரத் கமிட்டி மற்றும் சமுதாய நல் உள்ளங்கள்.



நாம் நிறைய ஊர்களில் பார்த்திருக்கின்றோம் இதுபோன்ற இஸ்லாமிய போட்டிகள் நடத்தி மாணவ மாணவிகளை பரிசளித்து ஊக்கப்படுத்துவார்கள், அதவும் ஒரு சில செல்வந்தரின்
முயற்சியால் நடைபெறும்.



அதுபோல நமதூரில் சைகுல் மில்லத் மற்றும் சீரத் கமிட்டி முயற்சியால் நம் சகோதரர்கள் உதவியால் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து கடந்த 13/02/2011 அன்று நமது மதரசா மன்பவுள் அன்வார் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த குர்ஆன் மனன போட்டி மற்றும் ஹதீஸ் எழுத்து போட்டி நடைபெற்றது.







விதிமுறைகள்:



இந்த போட்டியில் குர்ஆன் மனனம் செய்பவர்கள் ஆண்/பெண் 18 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்,



குர்ஆனில் 30 ஆம் ஜுசுவில் கடைசி 25 சூராக்கள் மனனம் செய்ய வேண்டும்



ஹதீஸ் போட்டியில் தீனியாத் இரண்டாம் பாகத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது.







மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வம்:



போட்டிக்கான அறிவிப்பு வெளியான நாள் முதல் மாஷா அல்லாஹ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பெயர்களை பதிவு செய்து கொண்டனர், மாணவ மாணவிகள் ஆர்வமாக போட்டிக்காக தங்களை தங்கள் பள்ளி ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் உதவியோடு தயார்படுத்தி கொண்டார்கள், இப்போட்டிக்காக 200 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டார்கள்







போட்டி இரண்டு கட்டமாக நடைபெற்றது:



போட்டி பெண்களுக்கு வடக்குத்தெரு மதரசா நிச்வான் பெண்கள் மதரசாவில் ஆண்களுக்கு பெரிய பள்ளிவாசல் தென் பகுதி தாழ்வாரத்தில் நடைபெற்றது.



குர்ஆன் மனன போட்டி காலையிலும், ஹதீஸ் எழுத்து போட்டி மதியம் நடத்தப்பட்டது, குர்ஆன் மனன போட்டியில் பெரும்பாலும் அனைவரும் நன்றாக விளங்கியதால் மறுநாள் 14/02/2011 அன்றும் போட்டி நடைபெற்றது, இதற்காக இமாம் கஜ்ஜாளி மற்றும் பிற பள்ளி தாளாளர் சிறப்பு அனுமதி அளித்து மாணவ மாணவிகளை ஊக்கபடுத்தினார்கள்.



இந்த காலகட்டத்தில் குர்ஆன் ஹதீஸ் சம்பத்தமாக போட்டிகள் நடத்தி மாணவ மாணவிகள் மத்தியில் இதுபோன்ற விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்தை உண்டு பண்ணவேண்டும் என்று இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் வலிவுருத்தினர்.



போட்டியில் வெற்றிபட்டவர்கள் பெயர்கள் மீலாது நபி தொடர் பயான் நிறைவு நாள் அன்று வெளியிடப்படும்.



=============================================



நாமும் நிறைய நல்ல காரியங்களில் இடுபடுகின்றோம், இதுபோன்று மார்க்க விசயங்களில் பிள்ளைகளுக்கு ஆர்வம் வரும் வகையில் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினால் மார்க்க கல்வி மீது அவர்களுக்கு தானாக ஆர்வம் வரும் இன்ஷா அல்லாஹ்.



thanks:-ஹாஜி



Tags: லால்பேட்டை

Share this