ஹஜ் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் முதல் பக்கத்தில் சிவப்பு மையால் “ஹஜ் பயணி’’ என குறிப்பிட வேண்டும்
நிர்வாகி
0
சென்னை, மார்ச் 30:
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் ,கடைசி நிமிட நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில்,
ஹஜ் கமிட்டியிடமிருந்து ஒதுக்கீடு கடிதம்வரும் வரை காத்திருக்காமல்
பாஸ்போர்ட்டுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தின் முதல் பக்கத்தில் சிவப்பு மையால் ஹஜ் பயணி என்று குறிப்பிட்டு.
வழக்கமான ஆவணங்கள், கட்டணங்களுடன் பாஸ்போர்ட் பெறுவதற்கான
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
thanks:-lalpet.com
Tags: சமுதாயசெய்தி