Breaking News

லால்பேட்டை பேரூராட்சி தேர்தலில் சமுதாய இயக்கங்களுடன் ஒன்றிணைந்து போட்டியிட முஸ்லீம் லீக் முடிவு

நிர்வாகி
0
லால்பேட்டை பேரூராட்சி மன்ற தேர்தல்தலைவர் /உறுப்பினர் பொறுப்பிற்க்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடுவதெனவும் மேலும் ஜமாஅத் சார்பில் வேட்பாளர்களை முன்மொழிந்தால் ஆதரிப்பதெனவும் நகர பொதுக்குழுவில் முடிவு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லால்பேட்டை நகர பொதுக்குழு காயிதே மில்லத் சாலை நிஜாம் காம்ப்ளெக்ஸில் 14 /08/2016 ஞாயிறு மாலையில் நடைபெற்றது
இக்கூட்டத்த்திற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில துணைத் தலைவர் மௌலானா தளபதி ஏ .ஷபீகுர் ரஹ்மான் தலைமை வகித்தார்
கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் கே.ஏ .அமானுல்லா ,மாநில சொத்துப் பாதுகாப்பு குழு உறுப்பினர் ஏ.ஆர்.அப்துர் ரஷீத் , மாவட்ட கவுரவ தலைவர் எஸ்.ஏ .அப்துல் கப்பார் ,நகர பொருளாளர் ஏ.எம்.ஜாபர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர தலைவர் எம்.ஓ அப்துல் அலி வரவேற்றார் நகர துனைச் செயலாளர் முஹம்மது தைய்யுப் முஹிப்பி தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார், நகர செயலாளர் எம்.ஹெச் .முஹம்மது ஆசிப் நன்றி கூறினார் நிகழ்ச்சியில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள நகர இளைஞர் அணி செயலாளர் கே.யூ .சைபுல்லா அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் லால்பேட்டை பேரூராட்சி தலைவர் /உறுப்பினர் தேர்தலில் சமுதாய இயக்கங்களுடன் ஒன்றிணைந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடுவது எனவும் லால்பேட்டை முஸ்லீம் ஜமாஅத் சார்பில் வேட்பாளர்களை முன்மொழிந்தாள் ஆதரிப்பது எனவும் தேர்தல் குறித்து பேச்சு வார்த்தை நடத்த மௌலானா தளபதி .ஏ .ஷபிகுர் ரஹ்மான் ,கே.ஏ.அமானுல்லா ,ஏ.ஆர்.அப்துர் ரசீது ,எம்.ஓ.அப்துல் அலி,எம்.ஹெச்.முஹம்மது ஆசிப் , ஏ.எம்.ஜாபர்,பி.எம்.காதர் ,ஏ .முஹம்மது தைய்யுப் ஆகியோர்களைக்கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இக்கூட்டத்தில் ,சவூதி காயிதே மில்லத் பேரவை ஏ .இனமும் ஹக் நகர நிர்வாகிகள் பி.எம்.காதர் , முஹம்மது பாரூக் ,எஸ்.ஏ.முஹிபுர்ரஹ்மான் ,எஸ்.ஏ .இக்ரமுல்லா ,நஜ்முத்தின் ,கே.ஏ .முஹம்மது அலி ,உபைதுர் ரஹ்மான் ,அப்துல் வாஜிது , முஹம்மது அன்வர் ,கவிஞர் ஏ.எம்.முஹிப்புல்லா , பாஜ்லூர் ரஹ்மான் , கரீம் கனி , சாதுல்லா ,பி.எம்.தைய்யுப் மாணவர் அணி மாநில இணைச் செயலாளர் ஏ .எஸ்.அஹமது மாணவர் அணி நிர்வாகிகள் ஆஷிக் ,அஸ்கர் ,முஜஜம்மில் ,இம்ரான் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் செயல்வீரர்கள் பங்கேற்றனர்.

Tags: லால்பேட்டை

Share this