Breaking News

சிதம்பரம் நகர ஜமாஅத்துல் உலமா பேரவை நடத்திய மழைக்கான சிறப்பு தொழுகை.

நிர்வாகி
0
சிதம்பரம் நகர அனைத்து ஜமாத்தார்களுடன் இணைந்து, சிதம்பரம் நகர ஜமாஅத்துல் உலமா பேரவை நடத்திய மழைக்கான சிறப்பு தொழுகை.
வண்டிகேட்டில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்றது.

லால்கான் பள்ளி இமாம் மௌலவி அபுதாஹிர், அண்ணாமலை நகர் பள்ளி இமாம் மௌலவி ஹிதாயத்துல்லா, நவாப்பள்ளி இமாம் மௌலவி ஹஜ் முஹம்மத் ரப்பானி ஆகியோர் சிறப்பு தொழுகை பற்றி விளக்கி கூறினர். கொள்ளுமேட்டுத்தெரு இமாம் மௌலவி ஷிப்லி குத்பா ஓதினார். பூதகேனி பள்ளி இமாம் ஹாபிஸ் மௌலவி ரஹ்மத்துல்லா தொழுகைநடத்தினார் .

லப்பைத்தெரு இமாம் மௌலவி முஹையத்தீன் பாவா துஆ ஓதினார்.

தொழுகையில் இப்ராஹிம் நகர் பள்ளி இமாம் மௌலவி கலீல் ரஹ்மான், பள்ளிப்படை சுலைமான்பீ பள்ளி இமாம் ஹாபிஸ் மௌலவி ஜாக்கீர் உசேன், , ஜமால் நகர் பள்ளி இமாம் மௌலவி அப்துல் மாலிக்,
ஓ.பி பள்ளி இமாம் மன்சூர், பி.முட்லூர் இமாம் மௌலவி பைரோஸ்கான், மேலச்சாவடி இமாம் ஹாபிஸ் மௌலவி ஷாஹ் ஹஜரத், பின்னத்தூர் இமாம் நூருதீன் மற்றும் சிதம்பரம் அனைத்து பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: சமுதாய செய்திகள்

Share this