நீர்களை சேமிப்போம்...
நிர்வாகி
0
குடிநீர் இல்லாமல் தமிழகமே பஞ்ச போர்வையை போர்த்திக் கொண்டுள்ளது.
குடிநீர் தட்டுப்பாட்டால் உணவகம்,கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள் இழுத்து மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் அருளாலும்,நம் முன்னோர்கள் செய்த சீரிய செயல்களால் நமதூரில் குடிநீர் பிரச்சினைகள் இதுவரை கிடையாது.இதற்கு இறைவனுக்கும்,நம் முன்னோர்களுக்கும் நாம் நன்றி கூற வேண்டும்.இதே நிலை தொடருமென்று உத்திரவாத பத்திரமும் நம்மிடம் கிடையாது என்பதை மனதில் பதிய வேண்டும்..
குளங்கள், வாய்க்கால்கள் நீர்நிலைகள் என்று இயற்கையாக அமைந்த ஊர் நமது ஊர். அவைகள், நம் தவறினால் சேரும் சகதிகளாக உருமாறி தனது இயற்கையான உருவத்தை பறி கொடுத்து நிற்கிறது நீர்நிலைகள்..
இவைகள் சரியான முறையில் தூர்வாரப்பட்ட வேண்டும். மழைநீரை எப்படி சேமிப்பது போன்ற விழிப்புணர்வும் நாம் கற்க வேண்டும்.ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் ஒழு செய்த தண்ணீர்கள் மறு பயன்பாட்டிற்கு இல்லாமல் சாக்கடையோடு சாக்கடைகளாகக் கலந்துவிடுகிறது.
ஒழு செய்த தண்ணீர்கள் வீணாகாமல், மரங்களுக்கோ அல்லது மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்துச் சேமித்தல் வேண்டும்...
நீர் மேலாண்மை குறித்த ஒரு வழக்கில் நீதிபதிகள் கூறியவை இவைகள்.
தண்ணீரை கிடைக்கும் போது வீணாக்கிவிட்டால் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகருக்கு ஏற்பட்ட கதிதான் தமிழகத்துக்கும் ஏற்படும். தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறினால் ஆறு, ஏரி, குளங்களி்ல் பார்த்த தண்ணீரை 'கேப்சூல்' வடிவில்தான் பார்க்க நேரிடும் என வலியுறுத்தியுள்ளனர். ...
ஒரு சொட்டு நீரின் மகிமை நம்மைவிட தண்ணீர் பஞ்சத்தில் இருக்கும் மக்கள் நன்கு உணர்ந்த தருணமிது. நமது வீடுகளில் இருக்கும் தண்ணீர் குழாய்கள், பள்ளிவாசல்களில் ஒழு செய்ய ஏற்பாடு செய்திருக்கும் தண்ணீர் குழாய்கள் சரி வர மூடாமல் சொட்டு, சொட்டாக தண்ணீர் சொட்டிக் கொண்டே இருக்கும் அதை பார்த்தும், பார்க்காமல் நம்மில் பலரும் கடந்து இருப்போம்... மக்களிடம் நீர் வீணாகுவது பற்றிய விழிப்புணர்வு செய்து இதைப் போன்ற சின்ன சின்ன தவறுகள் மூலம் தண்ணீர்கள் வீணாகுவதை சரி செய்தல் வேண்டும்.
தற்போது கிடைக்கும் நீர்களை வீணடித்தால் வருங்காலத்தில் நமக்கும் இந்த நிலைத்தான். அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.
ஏ.எச் . யாசிர் ஹசனி.
25/06/2019

Tags: லால்பேட்டை செய்திகள்