Breaking News

ஆமை வேகத்தில் செயல்படும் லால்பேட்டை பேரூராட்சி..!! பேரூராட்சி அதிகாரிகளை சந்தித்த தமுமுக மமகவினர்.!

நிர்வாகி
0

 லால்பேட்டை முக்கிய சாலைகளான (வடக்கு தெரு, மேலத் தெரு, காயிதே மில்லத் சாலை,இக்பால் வீதி,கொத்தவால் தெரு, இமாம் கஜ்ஜாலி பள்ளிகூடம்-குத்பா பள்ளி,அம்பெத்கர் வீதி) முக்கிய பகுதிகளில் மக்களுக்கு இடையூறு தரும்விதத்தில் சாலைகளை சீரமைப்பு என்ற பெயரில் விபத்தை உண்டாக்கும் வகையில் சாலை பணிகளை லால்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.


இதனை கண்டிக்கும் வகையில் லால்பேட்டை தமுமுக மமகவினர் பேரூராட்சி அதிகாரிகளை இன்று (13-08-2019) சந்தித்தனர்.


வருகின்ற (18-08-2019) ஞாயிற்றுக்கிழமை பேரூராட்சி நிர்வாகம் சாலைகளை மறுசீரமைப்பு செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.


வாக்குறுதியை பேரூராட்சி நிர்வாகம் தவறிவிட்டால் லால்பேட்டை தமுமுக-மமகவினர் சாலைகளை சீரமைப்பு பணிகளில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர்.

Tags: லால்பேட்டை செய்திகள்

Share this