Breaking News

லால்பேட்டை தோப்பு தெரு நடுநிலைப்பள்ளியில் தேசிய கொடியேற்றி சுதந்திரதின விழா கொண்டாட்டம்...!

நிர்வாகி
0
இந்திய திருநாட்டின் 73 வது சுதந்திரதின விழா,

லால்பேட்டை தோப்பு தெரு நடுநிலைப்பள்ளியில் தேசிய கொடியேற்றி கொண்டாட்டம்...!

ஆக 16,

இந்தியா முழுவதும் நாட்டின் 73 வது சுதந்திர தின விழா மிக சிறப்பபாக கொண்டாடப்பட்டு வருகிறது .


கடலூர் மாவட்டம் லால்பேட்டை தோப்பு தெரு அரசு நடுநிலைபலபள்ளியில் சுதந்திர விழா ஏற்பாடு செய்ய்பட்டு காலை 8 மணிக்கு தொடங்கப்பட்பட்டது .


தேசிய கொடியை பள்ளியின் பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் ஹாஜி.S.A.அப்துல் அஹது அவர்கள் ஏற்றி வைத்து சிறப்பித்தார்.


சுதந்திரத்தின் வரலாறுகளை நினைவுபடுத்தி மெளலவி S.A.செய்யது அவர்கள் உரையாற்றினார்,பெற்றோர் ஆசிரிய கழக துணை தலைவர் மெளலவி ஜாபர் அலி,பெற்றோர் ஆசிரிய கழக செயலாளர் G.ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


கொடியேற்று விழா நிகழ்ச்சியை தொடர்ந்து சட்ட மன்ற உறுப்பினர் திரு.முருகமாறன் MLA அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம், பீரோ,பெரிய ரேக்,பென்ஜ் 25,டெஸ்க் 25 ஆகியவற்றை பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் S.A.அப்துல் அஹது அவர்கள் பார்வையிட்டு , அனைவர்களின் முன்னிலையிலும் பயன்பாட்டிற்கு ஆசிரியர்களிடத்தில் வழங்கபட்டது , அப்பொழுது தொகுதி சட்ட்மன்ற உறுப்பினர் திரு.முருகமாறன் MLA அவர்களுக்கு பகுதி பொது மக்கள் சார்பாக நன்றி தெறிவிக்கபட்டது .


நிகழச்சிற்கான ஏற்பாட்டினை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு A.இரத்தின குமார் அவர்களின் தலைமையில் பட்டதாரி ஆசிரியர்கள் P.சங்கர்,K.ரஞ்சித்,B.தில்லை நாதன், இடைநிலை ஆசிரியர் S.ராஜவேல்,B.சந்தர வடிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.


விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக மர்ஹபா சமூக நலப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் S.A. ரஃபி அஹமது மற்றும்T.பைஜீர்ரஹ்மான் J.ஹஜ்ஜிமுஹ்ம்மது,
புஹாரி,J.கமருத்தீன்,சதாம், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags: லால்பேட்டை செய்திகள்

Share this