Breaking News

கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட காரணங்கள்...

நிர்வாகி
0

கர்ப்பப்பை இறக்கம் என்பதே பலநேரங்களில் பெண்கள் உணராமலே உள்ளார்கள் அல்லது மருத்துவரிடம் செல்ல கூச்சப்பட்டு நோய் முற்றிய நிலையில் தான் சிகிச்சைக்கு செல்லும் அவலம் உள்ளது.


பெண்மையின் தனித்துவம், வாங்கி வந்த வரம் அனைத்தும் கர்ப்பப்பைதான். பூப்பெய்துவதில் தொடங்கி, குழந்தை பெறுவது வரை பெண்மையின் அடையாளமாகவும் கவசமாகவும் இருப்பது அதுவே.கர்ப்பப்பையில் நோய்த்தொற்று, நீர்க்கட்டி என இவை தரும் தொல்லைகள் தனி. கர்ப்பப்பை இறக்கம் என்பதே பலநேரங்களில் பெண்கள் உணராமலே உள்ளார்கள் அல்லது மருத்துவரிடம் செல்ல கூச்சப்பட்டு நோய் முற்றிய நிலையில் தான் சிகிச்சைக்கு செல்லும் அவலம் உள்ளது.


சாதாரணமாக 2 செ.மீ. அளவுள்ள கர்ப்பப்பை, பூப்படையும் போது, 5 முதல் 6 செ.மீ. வரை வளர்கிறது. பிரசவத்தின் போது 5 கிலோ எடையுடன், 30 செ.மீ. நீளத்துக்கு விரிகிறது. குழந்தைப்பேற்றைத் தவிர, கர்ப்பப்பைக்கு வேறு வேலைகள் கிடையாது. பிரசவத்துக்குப் பிறகு அது சுருங்கி, மீண்டும் பழைய அளவுக்கு வரும்.


அதிக உடல் எடை இதனால் ஏற்படும் வயிற்றிலுள்ள கொழுப்பின் பளு, அது தரும் அழுத்தம் முக்கியமான காரணமாகும்.


ஆஸ்துமா, தொடர் இருமல் காரணமாக, உள் வயிற்றின் அழுத்தம் அதிகமாகி, கர்ப்பப்பை வெளியே தள்ளப்படலாம்.


பிரசவத்தின் போது குழந்தையின் எடை அதிகமாகி, அதிகம் முக்கி, குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பதும் கர்ப்பப்பை இறக்கத்துக்குக் காரணமாகலாம்.


பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்குவதற்கு முன்பே, அடுத்த கர்ப்பம் தரிப்பது அதாவது இடைவெளி இல்லாமல் பிரசவம்.


மலச்சிக்கல் பிரச்சனையால் வரலாம்.

இயற்கையாக கர்ப்பப் பையைச் சுற்றியுள்ள தசை நார்கள் பலவீனமாக இருப்பதால் கூட கர்ப்பப்பை இறக்கம் வரலாம்.


நிறைய குழந்தைகள் பெற்ற பெண்கள் ( அந்த காலத்தில்).

பிரசவத்தின் போது, ஆயுதம் போட்டுக் குழந்தையை எடுப்பது.

அதிக சிரமப்பட்டுக் குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பது.

கர்ப்பப்பை இறக்கத்திற்க்கான அறிகுறிகள் :

கர்ப்பப்பை இறக்கத்தால் நடப்பது சிரமமாகும்.

கர்ப்பப்பை தொடைகளுக்கிடையே உரசி, புண் உண்டாகும்.

கர்ப்பப்பை இறங்கும் போது, முன் பாகத்திலுள்ள சிறுநீர் பையும், பின் பக்கத்திலுள்ள மலக்குடலும் சேர்ந்து இழுக்கப் படலாம். அதனால் பின்வரும் அறிகுறிகள் தென்படும்.


இடுப்பு வலி, பின்புறம் இடுப்பில் கை வைத்து நின்றால் சற்று எளிதாக இருப்பது.

ஏதோ சதைப் போன்று கீழ்ப்பாகத்தில் இடிப்பது.

எப்போதும் வெள்ளைப் போக்கு அதிகமாக இருப்பது.

பெண்ணுறுப்பில் உலர்ந்த தன்மை.

அடிக்கடி ஏற்படும் அரிப்பு, அதனால் ஏற்படும் புண்.

சிலருக்கு இருமினால், தும்மினால், முக்கினால் கருப்பை இறங்குவது போன்ற உணர்வு.

அடிக்கடி சீறுநீர் வெளியேற்றம்.

சிறுநீரை அடக்க முடியாத நிலை.

சிரித்தால் கூட சிறுநீர் வெளியேறும் நிலை.

மலச்சிக்கல் போன்ற உணர்வு. அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது போன்றவை கருப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.

Tags: பயனுள்ள தகவல்

Share this