அபுதாபி, அல் அய்ன் பொது பேருந்து, பேருந்து நிலையங்களில் இலவச வைஃபை
அபுதாபி,அல் அய்ன் பொது பேருந்து மற்றும் பேருந்து நிலையங்களில் இலவச வைஃபை அறிமுகப்படுத்தி உள்ளன
அமீரகத்தில் உள்ள அனைத்து பொது பேருந்துகளிலும் இலவச வைஃபை சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக அபுதாபியின் போக்குவரத்துத் துறை (டிஓடி) இன்று அறிவித்தது
அபுதாபி, அல் அய்ன் மற்றும் மேற்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும், எமிரேட் முழுவதும் உள்ள அனைத்து குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையங்கள் இலவச வைஃபை அமைக்கப்பட உள்ளன
முதல் கட்டமாக பத்து பேருந்துகள், அபுதாபி பிரதான பேருந்து நிலையம் மற்றும் ஒரு பெரிய இருப்பிடங்கள் ஆகியவை தற்பொழுது அமல்படுத்த உள்ளன மேலும் 2020 முதல் காலாண்டில் 520 அனைத்து பேருந்துகளும் இலவச இணைய சேவை வரும் என்றனர்
சேவைகளை மேம்படுத்துவதற்கும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டிஓடியின் உள்கட்டமைப்பு மற்றும் தொலைத்தொடர்புத் தலைவர் அலி முகமது அல் ஜெய்தி தெரிவித்துள்ளார்.
Tags: உலக செய்திகள்