லால்பேட்டையில் மாநபியின் மாண்புமிகு வரலாறு தொடர் சொற்பொழிவு ஆரம்பமானது
லால்பேட்டை ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி நடத்தும் மாநபியின் மாண்புமிகு வரலாறு தொடர் சொற்பொழிவு அல்லாஹ்வின் பேரருளால் இன்று புதன்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் ஆரம்பமானது.
ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் முதல்வர் கடலூர் மாவட்ட அரசு காஜி மவ்லானா மவ்லவி ஹாபிழ் நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமை வகித்தார்கள்
லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி அல்ஹாஜ் S. நூருல்லாஹ் மற்றும் ஜாமிஆ மன்பஉல் அன்வார் செயலாளர் அல்ஹாஜ் K.A. அமானுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
தொடர் சொற்பொழிவு நிகழ்த்த உள்ள ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் பேராசிரியர் மவ்லானா மவ்லவி வேடசந்தூர் S.J. அப்துர்ரஹ்மான் ஹள்ரத் மற்றும் ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் பேராசிரியர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள் இந்நிகழ்ச்சியில் ஜமாஅத்தார்கள் பெரியவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Tags: லால்பேட்டை செய்திகள்