லால்பேட்டை துபாய் ஜமாத் செயற்குழு கூட்டம் நடைபெற்றது
லால்பேட்டை துபாய் ஜமாத்தின் செயற்குழு கூட்டம் நேற்று (04-10-2019)வெள்ளிக்கிழமை தலைவர் ஆஷிக் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது,
இந்த கூட்டத்தில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற (18-10-2019)வெள்ளிக்கிழமைபொதுக்குழுவைக் கூட்டலாம் என்றும், அதில்
1.புதிதாகத் தொடங்கப்படவுள்ள லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை,
2.ஜமாத் உறுப்பினர்களுக்குக் குறுகிய கால கடன்,
3.ஜமாத்தில் சந்தாவை அதிகப்படுத்தி மென்மேலும் அதிகப்படியான உதவிகளை நமதூருக்காகச் செய்திடவும்,
இந்த செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டது, மேலும் இது பற்றி ஏதேனும் உறுப்பினர்களுக்குக் சந்தேகம் இருப்பின் நிர்வாகிகள் அதற்கான விளக்கத்தை அளிப்பார்கள்.
இந்த செயற்குழுவின் தீர்மானமாக :
பாரம்பரியமிக்க நமதூரில் கஞ்சா போன்ற சில போதைப் பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், ஊர் மஹல்லா ஜமாத்தார்கள், அரசியல் கட்சி மற்றும் சமுதாய இயக்கங்களின் நிர்வாகிகளுக்கும், நமதூரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு. அறிக்கை ஒன்று அனுப்பலாம் என்று இந்த செயற்குழுவில் ஒரு மனதாகத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த செயற்குழுவில் ஜமாத்தின் இன்னாள், முன்னாள் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.
இங்கனம்.
லால்பேட்டை துபாய் ஜமாத்.
Tags: லால்பேட்டை செய்திகள்