Breaking News

இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை..!

நிர்வாகி
0

என் நினைவு சரியாக இருக்கும் எனில் ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா நண்பன் பத்திரிகையில் இந்த செய்தியை அடிக்கடி படித்துள்ளேன். மலாய மக்கள் பெரும்பாண்மையாக வாழும் ஊர்களில் பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் சீனர்களால் போதைப்பொருட்கள் விற்க்கப்படுவதும் பெரும்பாலான இளைஞர்கள் இதனால் மது கஞ்சா போன்ற கொடிய போதைப்பொருட்களுக்கு அடிமையானதும் பிறகு அரசாங்கம் சுதாரித்து கடுமையான நடவடிக்கைகள் மேற்க்கொண்டதை செய்தியாக படித்துள்ளேன். ஒரு இன அழிப்பில் அல்லது பழிவாங்குதலில் மறைமுகமாக தான் எதிர்க்கும் சமூகத்தின் இளைஞர்களை சிந்திக்க விடாமல் மது, போதை போன்ற கொடிய பழக்கங்களுக்கு ஆளாக்குதல் என்பது ஒரு மறைமுகமான இன அழிப்பு நடவடிக்கையாக பார்க்க வேண்டும்.


தமிழகத்தில் குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் வந்து சில சமூக விரோத கும்பல் போதை பொருட்களை விற்பனை செய்வதாகச் செய்திகள் முகநூலில் மற்றும் செய்திதாள்களில் பார்க்க முடிகிறது . அவ்வாறு அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு சட்டத்தின் துணையோடு இதைத் தடுக்க வேண்டும். இளைஞர்களைக் குறிவைத்துச் சீரழிக்கும் திடீரென்ற இதுபோன்ற செய்திகள் ஒரு வித அச்சத்தையும், வருத்தத்தையும் தருகிறது. நாளைய தலைமுறையை நம்பிக்கையானதாக உருவாக்க வேண்டும். அதற்கு ஒற்றுமையோடு அனைவரும் இதைத் தடுத்தாக வேண்டும். இதை தடுக்கும் பொறுப்பு சமூகத்தில் அனைவருக்குமானது.


இன்றைய இளைஞர்கள் மத்தியில் மது அருந்துவது என்பது ஒரு fashion ஆக அவர்களது மூளையில் நம்ப வைக்கப்பட்டுள்ளது. மது அருந்துவதை முகநூலில் புகைப்படம் இடும் அளவிற்கு மாறி உள்ளார்கள். மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை விட நாம் எப்படி இருக்க வேண்டும் என்ற தெளிவு இருக்க வேண்டும். நமது ஒற்றுமை பண்பாடு கலாச்சாரம் அடையாளமும் தான் நம்முடைய வலிமை அதை எங்கிருந்தோ யாரோ மது,பொதை என்ற கொடிய விசயங்களால் சிதைக்கப்படும்போது நாம் அதை சந்தேகத்தோடும் எச்சரிக்கையோடும் அனுகியாக வேண்டும்.
ரஹ்மதுல்லாஹ்

Tags: கட்டுரை

Share this