சிதம்பரம் நகரில் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு .
நிர்வாகி
0
சிதம்பரம் , புவனகிரி, பரங்கிப்பேட்டை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை , இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் , மஹல்லா ஜமாஅத் , மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் ஒருங்கிணைப்பில் இந்தியாவை பிளவுபடுத்தும் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் 24/12/2019 செவ்வாய் கிழமை காலை நடைபெற்றது .
சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் எம். அப்துல் காதர் உமரி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார் .
சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் எம்.முஹமம்து ஷிப்லி ரஹ்மானி நெறிப்படுத்தினார் .
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ., மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவர் மவ்லானா தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் , திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் பேராசிரியர் இளங்கோவன் , அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மணிரத்னம் , விடுதலை சிறுத்தை கட்சி மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினார் .
பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் , சிதம்பரம் வட்டார இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஆர். முஹம்மது ஜியாவுதீன் (செல்லப்பா) , பரங்கிப்பேட்டை ஜாமிஆ மீராப்பள்ளி நிர்வாகி கலிமா ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் , திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் , இந்திய கம்னியூஸ்ட் மாவட்ட செயலாளர் துரை , மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் மாநில குழு உறுப்பினர் பி . இப்ராஹிமிஷா (எ) மூஸா , தி.க தலைமை கழக பேச்சாளர் திலீபன் , மமக மாவட்ட செயலாளர் அஸ்லம் , மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் மவ்லானா எம். முஹம்மது ஷேக் ஆதம் மழாஹிரி , சிதம்பரம் நகர திமுக செயலாளர் கே.ஆர்.செந்தில் குமார் , மவ்லானா எம்.எஸ். அஹ்மத் கபீர் காஷிஃபி , புவனை சவுக்கத் , எஸ்.டி.பி ஐ மாநில பேச்சாளர் ஐ. ஷர்புத்தீன் ஷரீப் , CPI-M மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ் பாபு , மவ்லானா செய்யது அபுதாஹிர் காஷிஃபி உள்ளிட்டோர் கண்டன கோஷங்களை முழங்கினர் .
மவ்லானா கே.எம்.எஸ்.ஷாகுல் ஹமீத் பாக்கவி , மவ்லானா எம்.எஸ்.காஜா முயீனுத்தீன் மிஸ்பாஹி , மவ்லானா எம். முஹையத்தீன் பாவா , மவ்லானா வி.எம்.அப்துல் மாலிக் , மவ்லானா ஏ. ரஹ்மத்துல்லா , மவ்லானா எம்.பி. ஹஜ்ஜி முஹம்மது , மவ்லானா பைரோஸ் கான் மிஸ்பாஹி, உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள் ஆர்ப்பாட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைத்திருந்தனர் .இ.யூ. முஸ்லிம் லீக் சிதம்பரம் நகர நிர்வாகிகள் எம்.ஏ. முஹம்மது ஜெக்கரிய்யா, முஹம்மது அலி, முஸ்தபா, அப்துஸ் ஸலாம் நாஜிர் , முஸ்தபா, பரங்கிப்பேட்டை மெளலானா ஷேக் ஆதம், சிதம்பரம் நகர சமுதாய பிரமுகர்கள் ஏ.வி. அப்துல் ரியாஜ் , அப்துல் நாசர் , தி.மு.க ஜாபர் அலி , முஜிபு மற்றும் இப்ராஹிம் ஷா , லால்பேட்டையிலிருந்து கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் கே.ஏ. அமானுல்லா, ம ம க மாவட்ட தலைவர் அப்துஸ் ஸமது , முன்னாள் மாவட்ட தலைவர் அய்யூப் , பத்தஹுத்தீன் , இ.யூ. முஸ்லிம் லீக் ஏ.எஸ்.அஹமது , அப்துல் அலி , சைபுல்லா, மெளலவி ரி யாஸுல்லா , கொள்ளிடம் ரஷீது ஜான், மஜக கியாஸ், மமக யூசுப் , ஹாரிஸ் , கியாஸ் மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் , தி.மு.க , இ.யூ. முஸ்லிம் லீக் , மனித நேய மக்கள் கட்சி , காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு , இந்திய கம்யூனிஸ்டு , விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ்.டி .பி.ஐ,மனித நேய ஜனநாயக கட்சி , திராவிடர் கழகம் ஆகிய கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் செயல் வீரர்கள், சிதம்பரம் நகர சகோதர சமுதாய பெருமக்கள் , வணிக பிரமுகர்கள் , கலந்து கொண்டனர் .
கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் பரங்கிப்பேட்டை மெளலானா ஷேக் ஆதம் நன்றி கூறினார்.
Tags: சமுதாய செய்திகள்