Breaking News

லால்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் .

நிர்வாகி
0
லால்பேட்டையில் ஜும்ஆ தொழுகை நிறைவேற்றிய உடன் ஜாமிஆ மஸ்ஜித் , முபாரக் ஜும்ஆ மஸ்ஜித்களிலிருந்து கண்டன பதாகைகளை கையில் ஏந்தி தக்பீர் | முழுக்கத்துடன் லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத், ஜமாஅத்துல் உலமா சபை , அனைத்து அரசியல் கட்சியினர் லால்பேட்டை கைகாட்டியில் ஒன்று திரண்டு தமிழக அரசின் ஆதரவுடன் மத்திய அரசு கொண்டு வந்துள்ள
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று மத்திய , மாநில அரசை கண்டித்து கோஷங்களை முழங்கினர் .
ஜெ.எம்.ஏ. அரபிக்கல்லூரி நிர்வாகிகள் , பேராசிரியர்கள் , அனைத்து மஸ்ஜித்களின் முத்தவல்லிகள் இமாம்கள் , உலமாக்கள் , ஜமாஅத்தார்கள், சகோதர சமுதாய பெருமக்கள் ,அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் , செயல் வீரர்கள் ,ஆயங்குடி , ரெட்டியூர் , காட்டுமன்னார்குடி , வ குளக்குடி , கொள்ளுமேடு , மானியம் ஆடுர் , நெடுஞ்சேரி , புத்தூர் , கந்தக் குமரன் ஆகிய ஊர்களிலிருந்தும் திரளானோர் பங்கேற்றனர் .






















Tags: லால்பேட்டை

Share this