Breaking News

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் 3 வது செயற்குழு கூட்டம்

நிர்வாகி
0

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் 3 வது செயற்குழு கூட்டம்  24.01.2020 வெள்ளிக்கிழமை மாலை 6:30  மணிக்கு  தலைவர் ஜனாப் C M அப்துல் மாலிக் அவர்களின் தலைமையில் இந்தியன் இஸ்லாமிக் சென்டர் மினி ஹாலில் நடைப்பெற்றது.

ஜமாஅத்தின் துவக்கமாக கிராஅத்தினை சகோ S அப்துல் ரஹ்மான் ரப்பானி அவர்கள் ஓதினார்கள் வரவேற்பு மற்றும் தலைமை உரையை ஜமாஅத்தின் தலைவர் நிகழ்த்தினார்கள். செயற்குழு அறிக்கையை பொருளாளர் N முஹம்மது சித்திக் வழங்க, வரவு சிலவு கணக்குகள் மற்றும் நன்றியுரை துனை பொருளாளர் நூருல் அமீன் வழங்கினார். செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் பின் வருமாறு

1) ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் A ரிஜ்வான் அஹமது பணி நிமித்தமாக துபாய் சென்று விட்டதால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கேட்டுக்கொண்டார். அதனடிப்படியில் புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக நிர்வாக குழுவால் பரிந்துரை செய்யபட்டு அதை செயற்குழுவால் அங்கிகரிக்கப்பட்டு ஜமாஅத்தின் புதிய பொதுச்செயலாளர் N முஹம்மது சித்திக் மற்றும் பொருளாளர் M I நூருல் அமீன் ஆகியோரை செயற்குழு உறுப்பினர்கள் ஏக மனதாக முன் மொழிந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 2) ஜமாஅத்தின் அவசியம் கருதி மடி கணிணி ( Laptop) வாங்க ஒப்புதல் பெறப்பட்டது.

3) A ரிஜ்வான் அஹமது அவர்களுக்கு ஜமாஅத்திற்காக சேவை செய்தமைக்கு தன்னுடைய பங்களிப்பை பாராட்டி ஜமாஅத்தின் சார்பாக நன்றி கூறப்பட்டது.

4) ஜமாஅத்தின் சார்பாக இந்த ஆண்டு கல்வி பயிலும் 10 மற்றும் 12 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மேற்கல்வி படிக்க (என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்) என்ற கல்வி விழிப்புனர்வு நிகழ்ச்சி நடத்துவதற்கு ஜமாஅத்தின் சார்பாக ஒப்புதல் பெறப்பட்டது.

5) ஜமாஅத்தின் சந்தா நிலுவையில் உள்ளவர்கள் அதை தோய்வில்லாமல் கொடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இறுதியாக துவாவினை முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி அவர்கள் ஓதி செயற்குழு நிறைவுப்பெற்றது.

இங்கனம் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்

Tags: லால்பேட்டை

Share this