லால்பேட்டையில் 71-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
நிர்வாகி
0
லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் 71-வது குடியரசு தின விழாவில் லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரி முதல்வர், கடலூர் மாவட்ட அரசு காஜி மவ்லானா மவ்லவி நூருல் அமீன் ஹள்ரத் கலந்துக்கொண்டு தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார்கள்.
லால்பேட்டை லால்கான் ஜாமியா மஸ்ஜித் 71-வது குடியரசு தின விழா கொடி ஏற்றப்பட்டது இவ்விழாவிற்கு முத்தவல்லி நூருல்லாஹ் தலைமை தாங்கினார்கள்,
மவ்லானா மவ்லவி ஷைகுல் ஜாமிஆ .நூருல் அமீன் ஹள்ரத் கிப்லா அவர்கள் கொடிஏற்றி, துஆ செய்தார்கள்
இவ்விழாவில் உலமாக்களும், பெரியோர்களும், மஹல்லா வாசிகளும், ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் மாணவர்களும், பெரியப்பள்ளி வாசல் ஹிஃப்ழு &மக்தப் மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.
லால்பேட்டை இமாம்புகாரி ஸ்கூல் குடியரசு தினவிழா சிறப்பாக நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் மவ்லவி எம்ஒய் முஹம்மது அன்சாரி மன்பயீ தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார்.
சகீன் அஹ்மத் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.
இமாம்புகாரி கல்வி அறக்கட்டளை வாழ்நாள் அறங்காவலர் ஃபாத்திமா ஜன்னா தேசியக் கொடியேற்றினார்.
அறக்கட்டளை நிர்வாகச் செயலாளர் முஃபீத் அஹ்மத் மற்றும் ஆசிரியைகள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
நிகழ்வில் மாணவ / மாணவியர் பெற்றோர், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 71 ஆம் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஹாஜி K.A. அமானுல்லா தலைமை வகித்தார். மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ஹாஜி A.R. அப்துல் ரஷீது நகர தலைவர் M.O.அப்துல் அலி முன்னிலை வகித்தன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லால்பேட்டை நகர பொருளாளர் ஹாஜி A.M. ஜாபர் அவர்கள் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
மேலும் நகர துனை தலைவர் பாரூக் புதுப் பள்ளிவாசல் ஹாஜி J. குத்துபுத்தீன் அப்துல் சலாம் இளைஞரணி செயளாளர் சைபுல்லாஹ் ஹிதாயத்துல்லா முஹம்மது அன்சாரி பஜ்லுத்தீன் மாவட்ட உலமாக்கள் அணி தலைவர் மௌலவி ஜமால் அகமது முஹம்மது ஜெக்கரியா ஹலீகுல் ஜமான் முஹம்மது பாரூக் சைபுல்லா அலாவுத்தீன் ஜாபர் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
லால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில் 71வது குடியரசு தின கொடியேற்று விழா முத்தவல்லி எம்.ஹெச். அப்துல் ரஜாக் தலைமையில் நடைப்பெற்றது.
மெளலவி ஷேக் அலாவுத்தீன் கிராஅத் ஓதினார், டாக்டர் ஏ.ஆர்.அப்துஸ்ஸமது தேசிய கொடி ஏற்றி வைத்தார், மெளலவி அப்துஸ் ஸமது மன்பஈ தேசிய கீதம் பாடினார், முபாரக் நிஸ்வான் மத்ரஸா தலைவர் மெளலானா ஏ.பைஜுர் ரஹ்மான் ஹஜ்ரத் துஆ செய்தார் ஏ. முஹம்மது தைய்யூப் முஹிப்பி நன்றி கூறினார். இவ்விழாவில் முபாரக் ஜும்ஆ பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள் NCC மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
லால்பேட்டை கொல்லிமலை ஜன்னத்துன் நயீம் மஸ்ஜிதில் 71 ம் ஆண்டு இந்திய குடியரசு தின கொண்டாட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் முன்னால் பேரூராட்சி உறுப்பினர் மஸ்ஜிதின் முத்தவல்லி சேட் (எ) ஷேய்குல் ஆதம் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார் மேலும் இந் நிகழ்வில் மஸ்ஜித் இமாம் முஹம்மது அலி துணை இமாம் சபியுல்லா. ஹாபிழ்.அபுல் பைசல் மற்றும் சமூக ஆர்வலர்கள் யாசிர் , பஜில் அசார் ஆசிக் மற்றும் ஜமாத்தார்கள் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்தியாவின் 71ஆவது குடியரசு தின விழா அல்-மதினா ஸ்கூலில் மாணவர்கள் அணிவகுப்புடன் சிறப்பாக துவங்கியது சிறப்பு விருந்தினர் லால்பேட்டை முன்னாள் ஜாமிஆ மன்பவுல் அன்வார் பொருளாளர் முன்னாள் பனேஷா பள்ளி முத்தவல்லி அல்-மதினா ஸ்கூல்லின் தலைவர் ஏஜே அஹமதுல்லாஹ் B.E கொடியேற்றி மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்கள், பள்ளி நிர்வாக குழு ஹபிபுர்ரகுமான் ,முகமது ராபிக் ,முகமது இஸ்மாயில், மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைத்து பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் இறுதியில் அனைவருக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கி குடியரசு தின விழா வாழ்த்துடன் சிறப்பாக நடைபெற்றது.
லால்பேட்டை SDPI கட்சியின் சார்பில் குடியரசு தினத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்துள்ள உன்னத கொள்கைகளையும், நாட்டின் ஜனநாயகத்தையும் பாதுகாக்க உறுதியேற்போம்! - எஸ்.டி.பி.ஐகட்சி யின் லால்பேட்டை நகரம் சார்பாக குடியரசு தின வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறோம்.
லால்பேட்டை கைகாட்டியில் ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பாக இன்று தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
ஜாக்கிர் உசேன் நகர் மஸ்ஜிதே ஹக்கானி ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் பள்ளியின் முத்தவல்லி முஹம்மது யாசீன் அவர்களின் தலைமையில் வடக்கு கொளக்குடி முஸ்லிம் ஜமாஅத் சார்பாக ஜும்ஆ பள்ளிவாசலின் முத்தவல்லி முஹம்மது யாசீன்அவர்கள் தேசிய கொடி ஏற்றினார் இதில் ம.கொளக்குடி ஊராட்சிமன்ற துணைத் தலைவர். ஆரிபுத்தீன் 2வது வார்டு உறுப்பினர் அபுஹுரைரா வ.கொளக்குடி முஸ்லிம் ஜமாஅத் தலைவர் J.நூர் முஹம்மது கௌரவ தலைவர் அக்தர் ஹுசைன் செயலாளர். A.R.S நஜீர் அஹ்மது கூட்டுறவு வங்கி தலைவர் லால்பேட்டை*
*துணை செயலாளர். மௌலவி. B. இர்பானுல்லாஹ். பொருளாலர். மௌலவி. J. நூருஸ்ஸலாம் .ஒன்றிய கவுன்சிலர் ரஜினிகாந்த், கலையரசன் இஸ்மாயில்.பகீர் முஹம்மது. கவ்ஸர் பள்ளிவாசல் முத்தவல்லி ஜாபர் அலி இமாம் மௌலவி.முஹம்மது அஸ்அத்' இமாம் மௌலவி.ஜாகிர்உசேன் இமாம். மௌலவி.ஹிதாயத்துல்லா மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவர்களும் கலந்து கொண்டார்கள்.
லால்பேட்டை பூங்கா வீதி தெற்கு பள்ளியில் நடைப்பெற்ற 71 வது குடியரசு தின விழா..
71வது குடியரசு தின கொடியேற்று விழா பள்ளியின் தலைமையாசிரியர் பாபு தலைமை தாங்கினார். முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லி எம்.ஹெச். அப்துல் ரஜாக் தேசிய கொடி ஏற்றி வைத்தார், டாக்டர் அப்துஸ் ஸமது சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டார் இந்நிகழ்ச்சியில் பள்ளியின் கல்விக்குழு நிர்வாகிகள் பத்தஹுதீன், முஹம்மது அன்வர், மன்சூர், பெயிண்டர் ரஹமத்துல்லாஹ், மற்றும் அனீசூர் ரஹ்மான், அமானுல்லாஹ், அப்துல் மாலிக் மாணவர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
Tags: லால்பேட்டை