லால்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாம்
இந்தியாவில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 1995-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் நாட்டில் உள்ள அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகள் அவர்களது ஜீரண மண்டலத்தில் இருந்து அகற்றப்பட்டு அழிக்கப்படுகின்றது.
தமிழகஅரசின் தீவிர முயற்சி காரணமாக 2004-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் போலியோவினால் எந்த குழந்தைக்கும் பாதிப்பு இல்லை. இந்த ஆண்டிற்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று இந்தியா முழுவதும் நடக்கிறது.
இதன்படி, லால்பேட்டையில் காயிதே மில்லத் சாலை,கொத்தவால் தெரு, பெரிய பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை எதிர்புரம் , மேட்டு தெரு , சிங்கார வீதி, சாவடி,தெற்கு தோப்பு ஆகிய இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
Tags: லால்பேட்டை