ஆளுநர் மாளிகை நோக்கி எஸ்.டி.பி.ஐ. கட்சி பேரணி
நிர்வாகி
0
அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமான சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சியை திரும்பப்பெற வலியுறுத்தி
ஆளுநர் மாளிகை நோக்கி எஸ்.டி.பி.ஐ. கட்சி பேரணி
- பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்புஅரசமைப்பு சட்டத்துக்கு விரோதமான, ஆபத்தான நாட்டை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மத்திய அரசை கண்டித்தும், அந்த நடவடிக்கைகளுக்கு துணைபோகும் தமிழக அரசை கண்டித்தும், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்..பி.ஆர்.ஐ திரும்பப்பெற வலியுறுத்தியும், தமிழக அரசு இந்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் ‘ஆவணங்களை காட்ட மாட்டோம், அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்’ என்ற முழக்கத்துடன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக இன்று (ஜன.18) மாபெரும் பேரணி நடைபெற்றது.
நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்கவும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையின் லட்சியங்களை நிலைநிறுத்தவும் இந்த பேரணியில் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், பெண்கள், மாணவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.
Tags: சமுதாய செய்திகள்