அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் சமுதாயப் பிரமுகருக்கு வரவேற்பு
நிர்வாகி
0
அமீரகப் பயணம் மேற்கொண்டுள்ள கடலூர் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவரும்,தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத் தலைவருமான கல்வியாளர் ஹாஜி.கமாலுத்தீன் ஸாஹிப் அவர்களுக்கு அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி அபுதாபி நிஜாமத் உணவக அரங்கில் 10/01/2020 வெள்ளிக் கிழமை 4:30 மணிக்கு தலைவர் களமருதூர் ஹாஜி.ஷம்சுத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி வரவேற்று அறிமுக உரை நிகழ்த்தினார்.
அய்மான் தலைவர் ஹாஜி ஷம்சுத்தீன், துணைத் தலைவர் கீழை.முஹம்மது ஜமாலுத்தீன் ஆகியோர் சிறப்பு விருந்தினருக்கு சால்வை அணிவித்து, துணைப் பொதுச் செயலாளர் பூந்தை.ஹாஜா மைதீன் எழுதிய விடியலைத் தேடி நூலை பரிசளித்து கவுரவித்தனர்.
சிறப்பு விருந்தினர் ஹாஜி முஹம்மது கமாலுத்தீன் அவர்கள் தனது நீண்ட உரையில் கல்வியின் முக்கியத்துவம், பொருளாதார மேம்பாடு,வேலை வாய்ப்பு, நாட்டின் தற்போதைய நிலை குறித்து விரிவாக உரையாற்றினார்.
நிகழ்வில் முஸ்லிம் கல்வி இயக்க பொருப்பாளர் அதிரை.முஹம்மது மாலிக்,லால்பேட்டை அபுதாபி ஜமாஅத் தலைவர் அப்துல் மாலிக்,பொருளாளர் முஹம்மது சிதேவிப்பட்டிணம் நலச் சங்க செயலாளர் ஹாஜா முபீனுத்தீன்,அமீரக காயிதே மில்லத் பேரவை அபுதாபி அமைப்புச் செயலாளர் ஆவை.முஹம்மது அன்சாரி, மர்ஹபா சமூக நலப் பேரவை ஒருங்கிணைப்பாளர் லால்பேட்டை ஷுஐபுதீன்,உளுந்தூர்பேட்டை ஜாமிஆ ஆலம், கடலூர் ஷாஹுல் ஹமீது,அய்மான் நிர்வாகிகள் பார்த்திபனூர் நிஜாம் மைதீன், காயல் லெப்பைத் தம்பி,அமீரக காயிதே மில்லத் பேரவை பனியாஸ் பகுதி செயலாளர் லால்பேட்டை எஸ்.ஏ.அஸ்கர் அலி, செயற்க் குழு உறுப்பினர்கள் லால்பேட்டை நஜிபுல்லாஹ், முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக அய்மான் செயலாளர் பசுபதிகோவில் சாதிக் பாட்ஷா நன்றி கூற துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
Tags: சமுதாய செய்திகள்