Breaking News

லால்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு விளக்க மாநாடு

நிர்வாகி
0
லால்பேட்டையில் அனைத்துக்கட்சி கூட்டமைப்பு சார்பாக CAA மற்றும் NRC எதிர்த்து மாபெரும் விளக்க மாநாடு நேற்று 05.01.2020 மாலை 5 மணியளவில் லால்கான் தோப்பில் நடைபெற்றது. லால்கான் ஜாமியா மஸ்ஜித் முன்னாள் முத்தவல்லி A.R. நவ்வர் உசைன் தலைமை தாங்கினார் மௌலவி F.கமாலுதீன் மன்பஈ வரவேற்புரையாற்றினார் .
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA , திமுக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கழக உயர் நிலை செயற்குழு உறுப்பினர் MRK.பன்னீர்செல்வம் MLA, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் அல்ஹாஜ் M.பஷீர் அஹமது,SDPI கட்சி மாநில பொது செயலாளர் அ.செ.உமர் பாரூக் , INTJ தேசிய தலைவர் S.M.பாக்கர் , YMJ மாநில தலைவர் P.M.அல்தாபி ,தமிழக வாழ்வுரிமைக் கட்சி இராயநல்லூர் கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இறுதியாக  லால்கான் ஜாமியா மஸ்ஜித் முன்னாள் முத்தவல்லி A .முஹம்மது ஹாரிஸ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்
அனைத்து இயக்க மற்றும் தன்னார்வ அமைப்பு அரசியல் கட்சிகளினால் இணைந்து நடத்திய மாநாடு மாவட்ட அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது .
லால்பேட்டையில் ஒன்றாக இணைந்து ஆற்றல் மிக்க இளைஞர்கள் சமூக நலனுக்காக முன்னெடுக்கும் ஒவ்வொன்றும் இனி வெற்றியயடைய லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் வாழ்த்துகிறது .

Tags: லால்பேட்டை

Share this