Breaking News

சிறந்த சமூக சேவையாளர்கள் விருது பெற்ற கத்தார் லால்பேட்டை ஜமாஅத்!

நிர்வாகி
0
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை சார்பில் கடல் கடந்த சிறந்த பணியாளர்களை கொளரவபடுத்தும் விழா கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஒருங்கிணைந்த இந்திய சமூக மையம் அரங்கத்தில் 31/1/2020 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் லால்பேட்டையை சார்ந்த சகோதரர்களால் கத்தார் நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக கத்தார் வாழ் தமிழ் மக்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள தனது ஊர் மற்றும் வெளியூர் மக்களுக்காக கல்வி, திருமணம்,மருத்துவம்,வேலைவாய்ப்பு,பொதுநலன் போன்ற பல்வேறு சேவைகளை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் “கத்தார் லால்பேட்டை ஜமாஅத்” சேவைகளுக்காக சிறந்த சமூக சேவையாளர்கள் விருது வழங்கப்பட்டது.
தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்திருந்த முன்னால் முதல்வர் காமராஜர் பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி திருமதி T.S.K மயூரி மற்றும் TVS குழுமத்தின் நிறுவனர் ஹைதர் அலி அவர்கள் விருதினை கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் செயலாளர் அஹமது ரிலா,தலைவர் முஹம்மது தஸ்லீம் மற்றும் தொழிலதிபர் சிராஜுதீன் அவர்களும் விருதினை பெற்றுக்கொண்டனர்.
விருதினை பெற்று பேசிய ஜமாத்தின் செயலாளர் அஹமது ரிலா,
நாமெல்லாம் இந்தியர்களாக , மனிதர்களாக , தமிழ் மொழி உணர்வாளர்களாக , சகோதரத்துவமிக்க பண்புகளுடன் பழகி வருவதுடன் பொது சமூக சேவைகளையும் செய்து வருகிறோம் .
இந்த விருதை எங்கள் கத்தார் லால்பேட்டை ஜமாஅத்திற்கு இந்த ”கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை “ வழங்குவது மகிழ்ச்சியளிக்கிறது . இன்னும் நற்பணிகள் தொடர செய்ய தூண்டுகோளாகவும் பலர் இப்பணிகளில் ஈடுப்படுத்திக் கொள்ள ஊக்கமாகவும் இருந்திட இவ்விருதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம் .
நற்குணங்கள் உடையவரே உங்களில் சிறந்தவர் என இறைத்தூதரர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்
நாமெல்லாம் நற்பண்புகளை கொண்டு ஒருவருக்கொருவர் இன்முகத்துடன் இருந்து சேவைகள் நாளும் செய்து சிறந்து விளங்கக்கூடியவர்களாக இருப்போம் என்று கூறி விருது வழங்கிய அமைப்பிற்க்கு நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியினை அத்திக்கடை ஹாஜி, காட்டுமன்னார்கோயில் வலியுல்லா, சமீர், ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags: உலக செய்திகள் லால்பேட்டை

Share this