லால்பேட்டையில் இ.யூ. முஸ்லிம் லீக் நிறுவன நாள் கொடியேற்று விழா
நிர்வாகி
0
லால்பேட்டையில் இ.யூ. முஸ்லிம் லீக் நிறுவன நாள் கொடியேற்று விழா 10/03/2020 அன்று மாலையில் லால்பேட்டை புது பஜாரில் நடைப்பெற்றது நகர தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜி து தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார், முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.ஏ. அப்துல் கப்பார், மாவட்ட துணைச் செயலாளர் தாஜுத்தீன், 3ஆகியோர் முன்னிலை வகித்தனர் நகர செயலாளர் எம்.ஹெச்.முஹம்மது ஆஸிப் வரவேற்றார், நகர துணைச் செயலாளர் டி.ஏ.அபுசு ஹுது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், நகர பொருளாளர் ஏ. தைய்யூப் முஹிப்பி உறுதிமொழியை படித்தார், மாநில துணைத் தலைவர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் நிறுவன தின உரையாற்றி துஆ செய்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர துணைத் தலைவர்கள் எஸ்.எம்.ஹாமிது, கே எஸ்.சபியுல்லா, எம்.டி.கலீமுல்லா, மெளலவி ஜமால் அஹமது, துணைச் செயலாளர் ஜியாவுத்தீன், மாவட்ட இளைஞரணி பொருளாளர் முபாரக் நகர இளைஞரணி தலைவர் மெளலவி மஹபூப் அலி, எம்.ஹெச்.முஹிப்புல்லா, மாணவர் அணி மாநில பொருளாளர் ஏ.எஸ்.அஹமது, ஹிதாயத்துல்லா , முஹம்மது ஹஸன், உபைதுர் ரஹ்மான், சாதுல்லா, ஹபிபுர்ரஹ்மான், முஸாஹிர் மற்றும் நகர பிரமுகர்கள் பங்கேற்றனர் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம்.அனீசுர் ரஹ்மான் நன்றி கூறினார்.
Tags: லால்பேட்டை