அபுதாபியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தின நிகழ்ச்சி.! துஆ மஜ்லிஸ் - தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு!
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 73 - வது நிறுவன தினத்தை முன்னிட்டு அமீரக காயிதே மில்லத் பேரவையின் அபுதாபி மண்டலம் சார்பில் துஆ மஜ்லிஸ் மற்றும் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி 10 - 03 - 2020 செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் அபுதாபியில் உள்ள பேரவையின் மண்டலஅமைப்புச் செயலாளர் ஆவை ஏ.எஸ். முஹம்மது அன்சாரி இல்லத்தில் நடைபெற்றது.
பேரவையின் மூத்த துணைத் தலைவர் களமருதூர் ஷம்ஷுத்தீன் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் கீழக்கரை முஹம்மது ஜமாலுத்தீன் முன்னிலை வகித்தார்.
பேரவையின் மண்டலச் செயலாளர் ஏ.முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி வரவேற்புரையாற்ற, பொருளாளரும், நிர்வாகச் செயலாளருமான ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி அறிமுக உரையாற்றினார்.
பேரவையின் மண்டல இணைச் செயலாளர் சென்னை காதர் மீரான் ஃபைஜி, கொள்கை பரப்புச் செயலாளர் கொள்ளுமேடு சிராஜுத்தீன் மன்பஈ, சமூக நலப்பணி செயலாளர் லால்பேட்டை சிராஜுல் அமீன்,மக்கள் தொடர்புச் செயலாளர் மதுக்கூர் ஜஉபர் சாதிக்,வடகரை நூருல்லாஹ், ஃபைஜி,தலைமை நிலைய பேச்சாளர் லால்பேட்டை சல்மான் பாரீஸ் ஆகியோர் தாய்ச்சபை முஸ்லிம் லீகின் கடந்த கால சாதனைகள், நிகழ்கால செயல்பாடுகள் ஆகியவற்றை குறித்து உரையாற்றினர்.
இந்நிகழ்வில் பேரவையின் மண்டல ஜமாஅத் ஒருங்கிணைப்பு செயலாளர் ஹுசைன் மக்கீ மஹ்லரி,மின்ணணு ஊடகத்துறை செயலாளர் பூந்தை ஹாஜா,விழாக் குழு செயலாளர் ஆடுதுறை அப்துல் காதர்,இணைச் செயலாளர் லெப்பைத் தம்பி, ஹம்தான் பகுதி செயலாளர் உளுந்தூர்பேட்டை ஷேக் முஹம்மது அப்துல்லாஹ்,மதீனா ஜாயித் பகுதி செயலாளர் வடகரை ரிஃபாயுதீன்,அய்மான் சங்க செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன்,பேரவை செயற்குழு உறுப்பினர்கள் திருவாடுதுறை ஜுபைர்,வடகரை ஹாஜா ரில்வான் ஃபைஜி, கோட்டக்குப்பம் அப்துல் காதர்,கதிராமங்கலம் அலி சபுரி ஃபைஜி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
மறைந்த தாய்ச் சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள், ஊழியர்கள் மற்றும் தொண்டர்களின் மண்ணறை வாழ்க்கை சிறக்கவும், டெல்லி,உ.பி.அஸ்ஸாம்,கர்நாடகா கலவரங்களில் மரணித்தவர்களுக்கும், அமீரக சாதனைத் தமிழர்,நோபிள் மரைன் ஷாஹுல் ஹமீத் ஸாஹிப் மருமகன் புதுக்கோட்டை அப்துர் ரஹீம் மறைவிற்கும் யாஸீன் ஓதி, அபுதாபி ஜமாஅத்துல் உலமா சபை துணைத் தலைவர் முஹம்மது இஸ்ஹாக் பிலாலி அவர்களால் துஆச் செய்யப்பட்டு, தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மண்டல அமைப்புச் செயலாளர் ஆவை ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி நன்றியுரைக்குப் பின், ஜமாஅத்துல் உலமா சபையின் மூத்த முன்னோடியும், ஆடுதுறை ஜாமிஆ மஸ்ஜித் முன்னாள் இமாமுமான இ. ஷாஹுல் ஹமீது தாவூதி ஹஜ்ரத் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
Tags: உலக செய்திகள்