லால்பேட்டை பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களின் அவல நிலை
நிர்வாகி
0
லால்பேட்டை பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களின் அவல நிலை கையுறை இல்லாமலும் முகக்கவசம் மற்றும் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமலிம் துப்புரவு பணியை செய்கிறார்கள் கொரோனா வைரஸ் என்பது இவர்களை தொற்றாதா இவர்கள் மூலம் மக்களுக்கு பரவதா இல்லை இவர்கள் மனிதர்கள் இல்லையா மிக சிறப்பாக பனி யாற்றிவரும் மதிப்பிற்குரிய அய்யா Health and Family Welfare Department Minister விஜய பாஸ்கர் அவர்களின் அறிவுரை படி அனைவருக்குமான பாதுகாப்பு என்பது இவர்களுக்கு இல்லையா இது லால்பேட்டை பேரூராட்சின் மெத்தன போக்கா அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைளில் இவர்களுக்கும் பங்கு உண்டு என்பதை உணர்த்தும் வகையில் இந்த விஷயத்தை அலட்சியம் செய்யாமல் உடனடியாக அவர்களுக்கு கையுறையும் முகக்கவசமும் வழங்கி அவர்களையும் கொரோனா தொற்றுவில் இருந்து பாதுக்காவேனும் என்பது லால்பேட்டை மக்களின் கோரிக்கை மற்றும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அரசு அறிவித்த பாதுகாப்பை லால்பேட்டை பேரூராட்சி லால்பேட்டை மக்களுக்கு தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் மக்கள் பணியில் என்றும் மகத்தான துப்புரவு பணியாளர்களை பாதுகாப்போம் கொரோனவை ஒழிப்போம்! பாதுகாப்பாக இருப்போம்!
புகைப்படம் செய்தி :- ஜெய்கர் சஞ்சய்Tags: லால்பேட்டை