மதம் மாற்றப்பட்ட கொரோனா
சீனாவில் உருவான கொரோனா உலகம் முழுவதையும் தனது கோரமுகத்தைக் காட்டத் தொடங்கி விட்டது. பாலைவன மணல் பரப்பில் நீர் , உணவின்றி சிக்கிய மனிதர்களைப் போல் கொரானாவிலிருந்து இருந்து தப்பிக்கும் வழிகள் தென்படாமல், வல்லரசு நாடுகள் முதல் சாதாரண நாடுகள் வரை செய்வதறியாது நிற்கின்றன.`
இந்தியாவில் இந்த நோய் பரவத் தொடங்கினால் அதன் தாக்கத்தை அவ்வளவு எளிதில் கணித்திட முடியாதென்பது உலகம் அறிந்த ஒன்று. மத்திய அரசின் மெத்தனப் போக்கால் கொரோனாவின் கோரப் பிடி இந்தியா முழுவதும் இறுகத் தொடங்கி, இந்திய மக்களின் வாழ்க்கை கேள்விக் குறியானது. இந்த நோயிலிருந்து தப்பிப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதை மத்திய அரசு முன்கூட்டிய யூகித்திருக்க வேண்டும். “தென்கொரியா, சிங்கப்பூர், கனடா, கியூபா, தைவான் ஆகிய நாடுகளில் டிசம்பர் மாதமே தற்காப்பு பாணிகளில் தீவிரம் காட்டி கொரானா தொற்றை கட்டுப்படுத்தியுள்ளன”. நாமோ பிப்ரவரி க்கு பிறகுதான், கொரோனாவைப் பேசவே தொடங்கினோம் என்பதுதான் நாடு முழுக்க கொரோன சுற்றுலா வருகிறது
“கொரோனா தன் ரூபத்தை சீனாவில் வெளிக்காட்ட துவங்கிய போதே! முழு நாட்டையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு
வந்தது தைவான்”. “தைவானுக்கும், சீனாவுக்கும் உள்ள தூரமே வெறும் 80 மைல் என்பதை நம் கவனத்தில் கொள்ள வேண்டும்” அதற்கான முக்கிய காரணம், டிசம்பர் 31 - லேயே வெளிநாட்டுப் பயணிகளை முழு பரிசோதனை செய்தே பின்பே நாட்டிற்குள் நுழைய அனுமதியளித்தது. இப்படியாக, நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கையில் முழுவீச்சில் பார்வை செலுத்தியதால் மூன்று டிஜிட்டில்தான் கொரோனா தொற்று அந்த நாட்டில் உள்ளது.
“வல்லரசான அமெரிக்கா சீனாவை எதிரியாக கருதும். தன் நாட்டு மக்களின் நலனுக்காக சீனாவுடன் நட்புக்கரம் நீட்டத் தயாராகி விட்டது அமெரிக்கா.”வல்லரசுகள் கொரோனவை கட்டுக்குள் கொண்டுவந்து அழிக்க பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மதம் மாற்றத் தடை சட்டம் கொண்டு வரத் துடிக்கும் பிஜேபியே! கொரானாவை இஸ்லாம் மதம் மாற்றி சுன்னத் செய்து, அதற்கு, இஸ்லாமியப் பெயர் சூட்ட GOOGLE செய்துகொண்டிருக்கின்றது மத்திய அரசு”.
மிக நெருக்கமாக இருந்த போதும் நோய்த் தொற்றின் பாதிப்பை விட்டுத் தப்பித்த தைவானைப் பார்த்து நாம் பாடம் கற்கவிட்டாலும், நட்போ, விரோதமோ எதுவாக இருந்தாலும் பிறகு பார்ப்போம்.இப்போது நாட்டு மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்று கூறும் அமெரிக்காவைப் பார்த்து பாடம் கற்போம்.
நோய் என்பது இயற்கையானது.இயற்கை பொதுவானது.நோய்த் தொற்றுக்கு ஜாதி,மதம் பார்க்கத் தெரியாது.இந்தியா என்பது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இங்கு நோய்த் தோற்று முழுமையாகப் பரவினால் பல உயிர்களை இழக்க நேரிடும். உடலைப் புதைக்க கூட இடங்கள் கிடைப்பது கடினம்.
`
இந்திய இஸ்லாமியர்கள் எப்போதும் இந்தியாவில்தான் இருப்பார்கள். கொரோனா பிரச்சினைகள் முடிந்து வழக்கம் போல், இஸ்லாமியர்கள் மீது பாசிச விஷத்தை உமிழலாம். தற்போதைக்கு பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டறிந்து இந்திய மக்களைக் காப்பாற்றுங்கள்.
AH.யாசிர் ஹசனி,லால்பேட்டை
Tags: கட்டுரை