Breaking News

மறுமையின் நினைவலைகள்...

நிர்வாகி
0
யாரோ எதற்கோ,எப்போதோ செய்த தவறு கொரோனாவாக வளர்ந்து உலகத்தை துவேஷம் செய்துகொண்டிருக்கிறது. தீயவர்கள் செய்த தவறுகளுக்கு உலக மக்கள் விலை விலை கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுளார்கள்.

தவறு செய்தால் இறைவன் பிடிப்பான் என்ற பயம் இல்லாமை. செல்வங்களை தர்மங்கள் செய்யாமல், சுயநலமாக தனக்கு மட்டுமே செலவு செய்தல். பணபலத்தில் ஏழைகளை உதாசீனம் செய்தல். சொந்த நட்டு மக்களை அகதிகளாக மாற்றுவது. குலப்பெருமை பேசுதல்,மனிதனுக்கு மனிதன் சண்டை இடுதல்,நாட்டுக்கு நாடு நட்புணர்வு பேணாமல் போர் செய்தல். இயற்கை வளங்களை அழித்தல்,இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமே படைக்கப்பட்டது போன்று மற்ற உயிரினங்களை இன அழிப்பு செய்தல். முறையற்ற வருமானம் ஈட்டுதல்.இப்படிப்பட்ட, ஜீரணிக்க இயலாத மனிதன் செய்த தவறுகளால். கடல்,தரைகளில் குழப்பங்கள் ஏற்படுகின்றன..

செய்த தவறுகளை உணர்ந்து பாவ மன்னிப்பு கோர மனிதர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறன. மனிதர்கள் செய்த பாவங்களினால் ஏற்படும் விளைவுகளை அவனுக்கே, பிரதிபலிக்க செய்து படிப்பினைகள் பெற இறைவன் எச்சரிக்கை செய்கின்றான். மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (அல்குர்ஆன்30:41)

நாளை மறுமையில் மனிதன் செய்த பாவங்களினால், அல்லாஹ் பிடியில் நிற்கும் சமயம்! தாய், மகனை விட்டு ஓடக்கூடிய காட்சிகள்,மனைவி, கணவனை விட்டு ஓடக்கூடிய காட்சிகள், நண்பர்கள், சகோதரர்கள் விரண்டு ஓடக்கூடிய காட்சிகள். இப்படியாக, மக்கள் தங்களை மட்டும் காப்பாற்றிக் கொள்ள, “ஒருவரை விட்டு ஒருவர் முகம் பார்க்காமல் விரண்டு ஓடும் காட்சிகளை”, உலகில் செய்த தவறுகளுக்கு தண்டனைகளாக குர்ஆன் நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.

இன்று, அந்த காட்சிகள் கோரோனோ பாதுகாப்பு என்ற பெயரில் நம் கண்முன்னே ஒட்டுகிறதோ! என்ற கேள்கவிகளோடு. அச்சங்களும் ஆட்கொள்கின்றது.

கொரோனாவிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தனித், தனியே இடம் தேடி அடைக்கலம் கோர கேட்கிறது உலகம். யாரும்‌‌ யாரிடமும் முகம் கொடுத்துப் பேச பயங்கள் தடுக்கிறது. கை குலுக்க உள்ளம் படபடக்கிறது. தாய் மகனை விட்டுத் தள்ளி நிற்கும் காட்சிகள் உள்ளத்தைக் கீறுகிறது.மகன், தாயை விட்டுத் தள்ளி நிற்கும்‌ கொடுமைகள் உலகம் முழுக்க நடக்கிறது. நோய்த் தொற்று பயத்தால் நண்பர்கள் ஓடும் நிகழ்வுகள் அனைத்தும், “மறுமையின் நினைவலைகளின் முன்னூட்ட காட்சிகளாக இருக்குமோ என்ற வினா எழுகிறது”.

சமூக இடைவெளி என்று பெயரிட்டு அழைத்தாலும்,இது தன்னை மட்டுமே பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்துக் கொள்ள ஒரு திட்டம்தான் இந்த கொரோனா பாதுகாப்பு.நாளை மறுமையில் எந்த ஒரு அச்சங்களும் இல்லாமல் அல்லாஹ் முன் நிற்க நம்மை நாம் ஆயத்தம் செய்துகொள்ள வேண்டும்.

அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். (அல்குர்ஆன் : 80:34,35,36,37 )..

“இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது”. “வாகனங்கள், தொழிற்சாலைகள் உமிழும் புகையால், சுவாசிக்கப் பயந்து மூக்கு மூடிய ஓசோன் படலம், இன்று உலக அமைதியால் நல்ல காற்றைச் சுவாசிக்கின்றது”.”கூட்ட நெரிசலால் சுவாசிக்க மறந்த சாலைகள், இன்று... தூய்மையான காற்றைச் சுவாசிக்கத் தொடங்குகிறது”.. “மனிதனிடமிருந்து சுதந்திரம் கிடைத்த சந்தோசத்தில் காட்டு விலங்குகள் குதித்து ஆனந்ததாண்டவம் ஆடுகின்றன. ஆறுகள் தெளிந்து ஓடுகிறது. சந்தோசங்களை மீன்களோடு பகிர்ந்து கொள்கிறது கடல்”. தீங்கு செய்யாமல் மனிதனாக வாழ்ந்தால், கொரோனா போன்ற வைரஸ்களில்லா உலகமாக மாறும்.

“இந்த நேரத்தில், நாம் எங்கு? எப்போது? என்ன தவறு செய்தோம்? என்று யோசிப்போம். மனிதர்கள் அமைதியானால், உலகம் ஆரோக்கிய காற்றைச் சுவாசிக்கும் என்பதை ஊரடங்கு உத்தரவு நமக்குச் சான்று கொடுக்கின்றது”.

ஏ.எச் யாசிர் ஹசனி.

Tags: கட்டுரை

Share this