Breaking News

தமிழர்கள் நலவாரியம் லால்பேட்டையில் அரசு மருத்துவமனை அமைத்துத்தர வேண்டி திருமாவளவன் அவர்களிடம் கத்தார் லால்பேட்டை ஜமாஅத் சார்பில் கோரிக்கை!

நிர்வாகி
0

வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் மற்றும் லால்பேட்டையில் அரசு மருத்துவமனை அமைத்துத்தர வேண்டி சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினர் தொல் .திருமாவளவன் அவர்களிடம் கத்தார் லால்பேட்டை ஜமாஅத் சார்பில் கோரிக்கை! தோஹா, மே 15,

கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரைவை சார்பில் இணைய வழி மக்கள் சநதிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிதம்பரம் நாடளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், இயக்குனர் அமீர், காமராஜ் அறக்கட்டளையின் நிர்வாகியும் காமராஜர் அவர்களின் பேத்தி மயூரி, TVS Cargo நிறுவனர் ஹைதர் அலி மற்றும் கத்தார் வாழ் தமிழ் அமைப்புகள், கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் நிர்வாகிகள் முஹம்மது தஸ்லிம் ,யக்கீன் அஹமது, முஹம்மது உஸாமா, ஷபீர் அஹமது ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காகவும், சிதம்பரம் தொகுதி மக்களுக்காக கத்தார் லால்பேட்டை ஜமாத்தின் செயலாளர் அஹமது ரிலா சில கோரிக்கைகளை தெரிவித்தார். 1. வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்காக "வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்" அமைக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

2. கொரானா உடைய தாக்கத்தால் கத்தாரில் வேலைகளை இழந்தும், குடும்பத்துடன் வசிக்கும் பெரியவர்கள், கர்ப்பினி பெண்கள், நோயாளிகள் என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி தமிழகம் திரும்பமுடியாமல் தவிக்கும் தமிழ் நாட்டினருக்கு விமான போக்குவரத்து அமைத்துத்தராமல் இருக்கும் தமிழக அரசை வலியுறுத்தி விமான போக்குவரத்து அமைத்து தர கோரிக்கை வைக்கப்பட்டது.

3.லால்பேட்டை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான "உயர்தர அரசு மருத்துவமனை அமைத்து தர வேண்டும்".

4. லால்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

5.லால்பேட்டையில் நடுவண் அரசின் "பிரதம மந்திரி அவாள் யோஜனா" திட்டத்தில் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டுவதற்கு ஆவணம் செய்யவேண்டும். 6.வீராணம் ஏரி தூர்வார வேண்டும். 7. வீராணம் ஏரியை சுற்றுலா தளமாக அமைக்க வேண்டும். 8.தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் சீர் செய்ய வேண்டும் . 9.விசாரணை கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுக்கவேண்டும்.

கோரிக்கைகளை கேட்டறிந்த தொல்.திருமாவளவன் அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள். இந்நிகழ்வினை சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர் கத்தார் ஒருங்கிணைத்த பேரவை நிர்வாகிள் - தளபதி ஹாஜி, லால்பேட்டை வலியுல்லா, இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள்.

Tags: லால்பேட்டை

Share this