ஜாமிஆ மன்பஉல் அன்வார் முதல்வர் மவ்லானா நூருல் அமீன் ஹள்ரத் அவர்களின் தங்கை மறைவு
லால்பேட்டை வடக்கு தெரு மர்ஹும் சேவ்ஸன் முஹம்மது அவர்களின் மனைவியும் மவ்லவி ஹாபிழ் அஹ்மத் ரிழா, மவ்லவி ஹாபிழ் நபில் அஹ்மத் ஆகியோரின் தாயாரும் மவ்லானா முனவ்வர் ஹஸன் ஹள்ரத், மவ்லானா நூருல் அமீன் ஹள்ரத் ஆகியோரின் தங்கையுமாகிய ஹாஜ்ஜா ஸாயிஹாத் அவர்கள் இரவு 2 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அவர்களின் ஜனாஸா தொழுகை இன்று லுஹர் தொழுகைக்கு லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் நடைப்பெறும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.
Tags: வஃபாத் செய்திகள்