Breaking News

லால்பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் உயிர்தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு நினைவு அஞ்சலி..!

நிர்வாகி
0

நமது நாட்டின் லடாக் எல்லை அருகில் கல்வான் சமவெளிப் பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு முயற்ச்சி செய்து வரும் சீனா நாட்டின் இராணுவ வீரர்களை தடுத்து விரட்டும் முயற்ச்சியில் அஞ்சாமல் போரிட்டு உயிர் தியாகம் செய்து வீரமரணம் அடைந்த நம் இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு லால்பேட்டை கைகாட்டி பேருந்து நிறுத்தம் அருகில் மாவட்ட துணைத்தலைவர் நஜீர்அஹமது முன்னிலையிலும் நகரகாங்கிரஸ் தலைவர் ஹிதாயத்துல்லா, வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் இராகுல் காந்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் ஆணைக்கிணங்க  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் டாக்டர் கே.ஐ.மணிரத்தினம்  அவர்கள் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்க நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி வட்டாரத்தலைவர் பாபுராஜன், சங்கர் காட்டுமன்னார் குடி நகர தலைவர் அன்வர்,சலாம்பாய் அண்ணாதுரை, பரந்தாமன் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர் மௌன அஞ்சலிக்குப் பிறகு மாவட்ட செயலாளர் ஜின்னா நன்றி கூறினார்.

Tags: லால்பேட்டை

Share this