Breaking News

ஜமாஅத்துல் உலமா சபையின் முக்கிய அறிவிப்பு.!

நிர்வாகி
0

கண்ணியமிகு ஆலிம்கள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

துல் ஹஜ் பிறை 9 பஜ்ர் முதல் 13 அஸர் வரை ஒவ்வொரு பர்ழான தொழுகைக்குப் பிறகும் ஆண்கள், பெண்கள், ஜமாஅத்துடன் தொழுவோர்தனித்துத் தொழுவோர் அனைவரும் தக்பீர் கூற வேண்டும்

01.08.2020 புனிதமிகு ஹஜ் பெருநாளாகும். பள்ளிவாசல்கள் திறக்க அரசு அனுமதிக்காத பட்சத்தில் (அனுமதிக்கப்படாத பகுதிகளில்) ஈதுல் பித்ரு தொழுகைக்கு ஜமாஅத்துல் உலமா வழங்கிய வழிமுறைகளைப் பின்பற்றி ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளவும்

ஹஜ் பெருநாளன்று நிறைவேற்றப்படும் அமல்களில் குர்பானி மிக முக்கியமான அமல் என்பதால் தகுதியுடையை அனைவரும் குர்பானி கொடுக்க வேண்டும். மேலும் நமக்கும் அல்லாஹ்விற்கும் மத்தியில் நெருக்கத்தை ஏற்படுத்தும் உன்னதமான இந்த அமலை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவதை தவிர்க்கலாம். என ஜமா அத்துல் உலமா சபை அரிவிப்பு வெளியிட்டுள்ளது

Tags: சமுதாய செய்திகள்

Share this