பள்ளிவாசல் கட்டிட பணிக்கு கத்தார் லால்பேட்டை ஜமாஅத் நிதிஉதவி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் வடக்கு கொளக்குடி ஜாக்கிர் உசேன் நகர் அருகில் உள்ள பிஸ்மில்லாஹ் நகர் என்ற பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன அவர்கள் தொழுகைக்கு செல்வதற்கும் அங்குள்ள மாணவர்கள் மக்தப் செல்வதற்க்கும் சிரமமாக இருப்பதாக பள்ளிவாசல் கட்டட நிர்வாகிகள் கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் நிர்வாகிகளை தொடர்புகொண்டு தெரிவித்தனர் இதனையடுத்து ஜமாஅத்தின் மூத்த தலைவர் ஷபீர் அஹ்மது, தலைவர் முஹம்மது தஸ்லீம் கள ஆய்வுகள் செய்து முதற்கட்டமாக ரூபாய் 25,000 /- வழங்கப்பட்டது.தொடர்ந்து ஒரு பெண்ணின் ஆப்ரேஷன் செலவிற்கு மருத்துவ உதவியாக ரூபாய் 8,000 /- வழங்கப்பட்டது. கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு இதுவரை ஆஸ்திவாரம் போடப்பட்ட நிலையில் மேலும் பணிகள் தொடர போதுவான பொருளாதாரம் இல்லாததால் வேலை தடைப்பட்டு நிற்கிறது ஆகவே பொருளாதார உதவ முன்வருபவர்கள் பள்ளியின் நிர்வாகிகளை தொடர்புகொண்டு வழங்கலாம். தொடர்புக்கு:- +91 9944413737 +91 8667032713 +91 7867803028
Tags: லால்பேட்டை