சவூதி அரேபியா : F.அலாவுத்தீன் வழியனுப்பு நிகழ்வு
நிர்வாகி
0
ஜித்தா அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமாஅத்தின் தலைவராகவும் செயலாளராகவும் சிறப்பாக பணியாற்றிய ஜனாப் அலாவுத்தீன் அவர்கள் தாயகம் திரும்புவதையடுத்து வழியனுப்பு நிகழ்வு ஷரஃபிய்யா லால்பேட்டை நண்பர்கள் ரூமில் 21-08-2020 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இந்நிகழ்வில் நம் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு அவரை கௌரவித்தார்கள், மேலும் மௌலவி T. A. அப்துல் ஹாலிக் மன்பஈ அவர்களும் M. T. முஹம்மது ஆஷிக் அவர்களும் சகோதரர் அலாவுத்தீன் அவர்களின் சேவைகளை பாராட்டியும் தாயகத்தில் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் சமுதாய பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்கள்.
அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமாஅத், ஜித்தா, சவூதி அரேபியா
Tags: லால்பேட்டை