சென்னை மண்ணடி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் பெயர் சூட்டுக!
நிர்வாகி
0
கண்ணியத்தமிழர்,தன் வாழ்நாளெல்லாம் எளிமையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்து தாய் மொழி தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டுமென முழங்கிய முதல் தலைவர் கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதே மில்லத் அவர்கள்.
பண்டிட் ஜவஹர்லால் நேரு,லால்பகதூர் சாஸ்திரி,,இந்திரா காந்தி போன்ற இந்திய பிரதமர்களாலும், திராவிட இயக்கங்களின் சுடராக விளங்கிய தந்தைப் பெரியார்,பெருந்தலைவர் காமராஜர்,பேரறிஞர் அண்ணா,டாக்டர் கலைஞர்,புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். போன்ற ஆளுமை மிக்கத் தலைவர்களால் பெரிதும் போற்றப்பட்டவர்,சென்னை மாகாண எதிர்க் கட்சித் தலைவராகப் பணியாற்றிய கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதேமில்லத் அவர்கள்.
அந்த அரும்பெரும் தலைவரின் பெயரை,அவர் அதிகமாக வந்து சென்ற மண்ணடி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சூட்டி தமிழக அரசு பெருமை படுத்த வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம். -ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி தேசிய கவுன்சில் உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
Tags: செய்திகள்