லால்பேட்டை வீராணம் ஏரிக்கரையில் நடை பயிற்சி செய்ய தனிப் பாதை அமைக்கபடுமா ..!
லால்பேட்டை வீராணம் ஏரிக்கரையில் நடை பயிற்சி செல்வோர் உயிரை காப்பற்றிக் கொள்ள வேண்டியே அந்த சாலையில் வர தயங்குகிறார்கள் ஏரியின் அழகிய காலை தென்றலை அனுபவித்த படி நடந்து போய் வரலாம் என்றால் தறிகெட்டு ஓடும் வாகனங்களினால் போகவே பயமாக இருக்கிறது இரு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை வேகம் நடைபயிற்ச்சி செல்பவர்களுக்கு சுத்தமாக பாதுகாப்பே இல்லை , எனவே நடை பயிற்சி செல்பவர்களுக்கு நத்தமலை வரை ஒரு தனிப் பாதை அமைத்து தர சட்டமன்ற உறுப்பினரும் , பாராளுமன்ற உறுப்பினரும் ஆவண செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . ஏரிக்கரையில் பெரும்பாலான இடங்களில் மதுப் பிரியர்கள் குடித்துவிட்டு ஏரியில் காலி மதுப் பாட்டில்களை வீசி செல்வதும் சாலை ஓரங்களில் பாட்டில்களை உடைத்து போட்டு செல்வதும் கட்டுபடுத்தப்பட வேண்டும் , நெடுஞ்சாலை ரோந்து காவல் வாகனம் அந்தப் பணியை செய்ய வேண்டும்.
Tags: லால்பேட்டை