Breaking News

காட்டுமன்னார்குடியில் இராஜிவ் காந்தி 76-வது பிறந்தநாள் விழா

நிர்வாகி
0

காட்டுமன்னார்குடியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கடலூர் மாவட்டம் ( தெற்கு ) சார்பில் முன்னாள் பாரதப்பிரதமர்  இராஜிவ் காந்தி அவர்களின் 76-வது பிறந்தநாள் விழா மாவட்டத்தலைவர் ஐ.பெரியசாமி தலைமையில் நடந்தது. 

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் டாக்டர் கே.ஐ.மணிரத்தினம் அவர்கள் இராஜிவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து சிறப்புரை ஆற்றினார். பல்வேறு கட்சியில் இருந்து 200 பேர் காங்கிரஸ்கட்சியில் இணைந்தனர். மாநிலபொதுக்குழு உறுப்பினர் மணிமொழி, மாவட்டதுணைத்தலைவர் நஜீர்அஹமது,வட்டார தலைவர்கள் சங்கர், பாபுராஜன், திருவரசமூர்த்தி, நகர தலைவரகள் அன்வர்,இதாயத்துல்லா மகளிர் அணிதலைவி கரோலின்- அண்ணாதுரை,மற்றும் ரங்கநாதன், பாபு ,செல்வம், ஆடூர்முருகன், பரந்தாமன் உருத்திரசோலை அந்தோணி மற்றும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: செய்திகள்

Share this