குறுங்குடியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் பலி
நிர்வாகி
0
காட்டுமன்னார்குடி தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென நிகழ்ந்த வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சம்பவ இடத்திற்கு மாவட்ட கண்காணிப்பாளர் விரைந்துள்ளார். நாட்டு வெடிகள் தயாரிக்கும் தனியார் ஆலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மற்றவர்களை மீட்கும் பணியில் பொதுமக்களும் போலீசார் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
Tags: செய்திகள்