லால்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்பாட்டம்.!
கடலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக லால்பேட்டை பேருந்து நிலையம் அருகில் 10.9.2020 மாலை 5 மணிக்கு மாவட்ட தலைவர் A. பயாஸ் அஹமது மன்பயி தலைமையில் செப்டம்பர் 15 - பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறைவாசிகளையும் பாரபட்சமின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ,
SDPI மாநில பேச்சாளர் சர்புதீன் ஷரீஃப் கண்டன உரையாற்றினார்.
SDPI கட்சியின் தொகுதி செயலாளர் நிசார் அஹமது நகர தலைவர் அஹமதுல்லாஹ் SDTU மாவட்ட செயலாளர் ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக அரசே! சிறைவாசிகள் மீது கருணை காட்டு! ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்!
ஆர்பாட்டத்தில் ஜமாத்தார்கள், SDPI கட்சி தொகுதி, நகர நிர்வாகிகள், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Tags: லால்பேட்டை