Breaking News

ஸஜ்தாசெய்யும்போது இரு பாதங்களும் தரையில் படாமல் தூக்கி இருந்தால் தொழுகை கூடுமா?

நிர்வாகி
0

ஸஜ்தா செய்யும்போது இரு பாதங்களின் விரல்களையும் தரையில் நன்றாக பதியவைக்க வேண்டும்.

ஆகக்குறைந்தது ஒவ்வொரு பாதத்திலும் மூன்று விரல்களாவது தரையில் இருக்க வேண்டும்.

பாதங்கள் தரையில் படாமல் தூக்கியவண்ணமிருந்தால் தொழுகை நிறைவேறாது ; தொழுகையை திரும்பவும் தொழவேண்டும்.

ஸஜ்தாவுடைய முழுநேரமும் பாதங்களை தரையில் வைப்பதுவே முறையாகும்;

எவராவது ஒரு தஸ்பீஹ் ஓதும் நேரம் மட்டும் பாதத்தை தரையில் வைத்து விட்டு பின்பு காலை தூக்கிவிட்டால்

தொழுகை கூடிவிடும் என்றாலும் மக்ரூஹான வெறுக்கத்தக்க செயலாகும்; இப்படிப்பட்ட செயல்களிலிருந்து தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.

ஆதாரம்:ஃபதாவா ஷாமி.

முஃப்தி நூருல் அமீன் மன்பயீ.

Tags: இஸ்லாம்

Share this